பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

357


களும் ஏனைய அசுகாபிமார்களுமாகிய தோழர்களும் இருந்தார்கள் என்பது.

"அன்னவரம் மொழியுரைக்க நபியிறசூல்
மனத்தறிவா லாய்ந்து பார்த்தே
யுன்னியரு ளுடனெழுந்தி யார்களசு
ஹாபிகளு மொருங்கு சூழ..." [1]

என்றும் உம்றாச் செய்வதற்காக நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மக்க மாநகரத்துக்குச் செல்லக் கருதி ஒர் அசு ஹாபித் தோழரையும் அழைத்து வலிமைமிக்குடைய நான்கு கலீபாக்களையும் நெருங்கிய கோபத்தையுடைய போர் வீரர்களான அசுகாபிமார்களையும் உடனே அழைத்து வரும் படி கட்டளை இட்டமை,

"அருளு மேவல்செய்வோரசு ஹாபியை
வருதி சென்று வலிமிகு மியார்களைச்
செருகு வெஞ்சினச் சேனையை கூயிவண்
டருக வென்றுமு கம்மது சாற்றினார்." [2]

என்றும் குலாபா உறாஷதீன் என்னும் நான்கு கலீபாக்களும் அழகு மிக்கவர்கள் என்பது,

"ஏர்கு லாவிய யார்களும்" [3]

என்றும் வீரமானது விளங்கும் கூரிய வாளாயுதத்தையுடைய நான்கு கலீபாக்கள் என்பது,

"...............வீர
மிலங்கிய வடிவாட் செங்கை யார்கள் ........." [4]

என்றும் வருணிக்கப்பட்டுள்ளது.

  1. 1.சீறா. பனீ குறைலா வதைப் படலம் 55
  2. 2. சீறா. உமுறாவுக்குப் போன படலம் 3
  3. 3. சீறா. உமுறாவுக்குப் போன படலம் 5
  4. 4. சீறா உ முறாவுக்குப் போன படலம் 64