பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362


"கொற்ற மேற்கொண்ட தீனரு முகம்மதுங் குறித்து
வெற்றி யாம்படி யெடுத்திடக் கிளர் மண்ணில் விரைவின்." [1]

ஒரு நாள் அசறுத் தொழுகைக்குரிய நேரம் வந்தது. அசறு தொழுவதற்காக அங்குள்ளவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்தார்கள். எல்லோருக்கும் கேட்கக் கூடியதாக பாங்கு சொல்லும்படி கூறினார்கள். இதனையே உமறுப்புலவர் இவ்வாறு ஒரு செய்யுளில் அமைத்துப் பாடியுள்ளார். இதனை பாங்கு என்றே குறிப்பிடுகிறார். யாப்பமைதி கருதியே இங்கு பாங்கு என்று அச்சொல் உபயோகிக்கப்பட்டிருக்கலாம். இதுதான் அந்தச் செய்யுள்.

"ஆரணப் பொருளை யோர்ந்த அளவினில் அசறு தோன்றப்
பூரணத் தொழுகை கொண்ட புணர்ப்பொடு பாங்கெல் லோர்க்கு
நேருற விளங்க வள்ள னின்றதீ னவர்க டம்மைத்
தாரணி யிடத்தி ரண்டு பாகமாய்த் தனிபிரித்தார்." [2]

சீறாப்புராணம் போன்ற இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களில் இஸ்லாம் மணங் கமழுவதற்குப் பாட்டுடைத் தலைவர்கள் முஸ்லிம் தலைவர்களாக இருப்பதுவோ இஸ்லாத்துடன் நெருங்கிய தொடர்புடைய விஷயங்கள் வருணிககப்படுவதுவோ மாத்திரம் காரண மன்று. இஸ்லாமிய மொழியான அறபுச் சொற்களும் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே அறபு மொழியுடன் தொடர் பூண்டு வளர்ந்தோங்கிய பாரசீக மொழிச் சொற்களும் சீறாப்புராணம் போன்ற இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய காப்பியங்களுக்குப் புது மெருகு கூட்டுவதோடு

  1. 1. சீறா, உகுதுப் படலம் 287
  2. 2 சீறா. தாத்துற்றஹாக்குப் படலம் 22