பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

369


வளைவுகள், இயற்கை எழில், யாவும் தமிழகச் சூழலிலேயே பிரப்படுகின்றன.

புலவர் பனீ, சின்னச்சீறாவினை "தீன் நபி இறசூல் சிறாச் சரிதையில் சிறிது சொல்வோம்" என ஆரம்பிக்கின்றார். இறுதியில் "தூய செந்தமிழ்"-"கோவை" என்று புலவர் கூறும் திறன் ஓர்ந்துணரத்தக்கது. ஆம்! உமறுவின் சீறாக் கோவையாக ஹிஜ்ரத்துக் காண்டத்தின் தொடராக உறனிக் கூட்டத்தார் படலத்தின் கோர்வையாக சின்னச்சீறா பாடியளிக்கப் பெற்றத றோ! ஹிஜ்ரத்துக் காண்டத்தின் தொடர் இணைப்பாகப் பாடும் சின்னச் சீறாவினை இறசூல் காதை" [7, 12] "நபி இறசூல் காதை" (13) "இறகுல் புகழ்" [ ] என பனீ அகமது மரைக்காயர் பகர்கிறார்.

சினைச்சீறாவை முதன் முதலில் பதிப்பித்தவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உதுமான் லெப்பை என்பவரின் புதல்வர் பக்கீர் முகியித்தீன் என்பவர். இவரே நூற்பதிப்பு துறையின் முன்னோடியாவர்.[1], இஸ்லாமிய இலக்கிய ஏட்டுப் பிரதிகளைத் தேடி, அவற்றைப பரி சோதித்து, முதன் முதலில் வெளியிட்டவர், நூற்பதிப்புத் துறையில், சி. வை. தாமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர் போன்றோருக்கு முற்பட்டவருமாவார்.

உமறுப்புலவர்-தம் கொடை நாயகரான வள்ளல் அபுல் காசீம் மரைக்காயருக்கு நன்றி பாராட்டும் தன்மையினை நாட்டுப் படலம் (41) தீனிலைக் கண்ட படலம் (110)


(2) இலங்கை S. M. கமாலுதீன் 'இலங்கை முஸ்லிம்களின் இலக்கியமரபு'

24

  1. 1. (1) கலாநிதி அல்ஹாஜ் ம மு. உவைஸ்'முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள்"