பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

371


"வாரி இடங்கள் செவிபடு
மழையின் உருமேறு எனமுழங்க"

[3131

எனப் பாடுகிறார். ஈண்டு, குஞ்சுமூசுப்புலவர், சையிதத்துப் படைப்போரில் இவ்வாறு பலவகைக் கருவிகளைப் பாடுவது ஒப்பு நோக்கத்தக்கது.[1]

நபிகள் நாயகத்தை, புலவர் பனீ, "தீன்பயிர் விளைத்துப் புன் குபிர் களைந்து, விரித்தசீர் இறசூலுல்லா" [16] என்கிறார். இவ்லணிமணித் தொடரை உமறுவின் 'நபியவதாரப் படலத்'திலிருந்து பெற்றிருக்க வேண்டும் என்று கூறத் தோன்றுகிறது. சீறா 'குபிரின் குல மறுத்து நெறி விளக்க* [19] 'தீனெனும் பயிர்க்கோர் செழுமழை' [92] போன்ற தொடர்களைக் குறிப்பிட்டுக் கூறலாம் இவ்வாறே உமறுவின், 'துறந்தவர் இதய ஆசனத்து' என்னும் அருமைத் தொடர், புலவர் பனீயின் 134 ஆம் பாடலில் அப் படியே இடம் பெறுகின்றது.

சீறாப்புராணத்தில் 'அந்தகண் படல'த்தில் கடுநோய்வாய்ப்பட்ட ஒருவன், பெருமானாருக்குத் தூது அனுப்ப, நாயகம் அற்ப மண்ணை அள்ளி, உமிழ்ந்து கொடுத்து அனுப்ப, 'உயிர் தரும் மருந்'தென அது உதவிய நிகழ்ச்சியினையும், 'விடமீட்ட படலத்தில் அபூபக்கர் (றலி) அவர்களுக்கு பாந்தளின்விடம் அகற்றும் பொருட்டு கடிவாயில் பெருமானார் தம் உமிழ்நீர் இட்ட நிகழ்வும், 'நதி கடந்த படலம்', 'பாந்தள் வசனித்த படலம்', 'புவி வசனித்த படலம்', 'மானுக்குப் பிணைநின்ற படலம்', 'இவற்றை உள்வாங்கி மனதுட்கொண்டு, சின்னச்சீறாவில், ஆங்காங்கே அருந்தொடர்களாக,'மருந்து என உமிழ்நீரால்

  1. 1. 'முரலி துந்துமி திமிலை பம்பைகள் முருடு திண்டியம் மத்தளம் குரைசெய் பூரிகை நவுரி காகளம் கொம்புமோ கர வீணைகன் பெருவளப் பறை சின்னமுத்துடி பேரிகின்னரமும் தவில் அரவ மிஞ்சிய கடல் அமைந்திட ஆர்த்தடர்ந்தன் சேனையே"