பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372


நோய் மாற்றினார் (153) 'நதியின் மான்பிறகு எழுந்த அகமது (1248)' கானில் பாம்பொடும் உரைத்த வள்ளல் (1455) 'வனத்தில் புலியும் மானினமும், வந்து பணியும் நபி' (1716) எனபனவாக ஒளிர்கின்றன.

சீறாப்புராணத்தில் உமறுப்புலவர் கடிதம் என்பதற்கு பத்திரம், பாசுரம், ஒலை என்ற சொற்களைக் கையாண்டுள்ளார். புலவர் பனீயோ காகிதம், பத்திரம், திருமுகம், ஓலை நிருபம், கத் (இந்தி) பாசுர நிருபம், முடங்கல், பாசுரம் விண்ணப்பம் என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

சின்னச்சீறா, ஒன்பது கொற்றவர்கட்கு பெருமானார் அரசு நிலையில் தீட்டும் பத்திரங்களை (பாடல் 17) ஒவ்வொரு படலங்களிலும் விடுக்குமாறு ஆரம்பிக்கின்றது. இறக்கிமாத் தகிய்யத்து, அபுறேசு, நஜாசாராஜா முகவ் விக்கீசி ராஜா, புறுகாவூர் ஆரிதுராஜா, அவுதாராஜ, உம்மான் கலந்தா. முந்திறி ராஜா, ஏமன் ராஜா ஆகிய ஒன்பது - மன்னவர்க்கும் பெருமானார் எழுதிய மடலும், அவற்றின் விவரங்களும் இப்படலங்களில் கூறப்படுகின்றது, அவ்வொன்பது மன்னர்களின் பெயர்களைக் கொண்டே படலங்களின் தலைப்பு இலங்குகிறது. பின்னர் அவற்றினை விரித்து இத்தகைய நிருபம தீட்டி ஒன்பது மன்னாக்கு' ( 31) என முடிக்கும் திறன் அறிந்துணரத் தக்கது.

சின்னச்சீறா பகரும் செய்திகளுள் சில

உமறுவின் சீறாவில் பெருமானாரின் அற்புதங்கள் அழகுறப் பேசப்படுவது போன்றே சின்னச்சீறாவிலும், பெருமானார் அற்புதங்கள் ஆங்காங்கே பேசப்படுகின்றன. அவற்றுள் சில......

(அ) குபலின் புத்துகானைப் பேச வைத்த அற்புதம் [224, 225, 226]

(ஆ) வேங்கை அலியின் இருகண்வலி நோவு அகல. பெருமானார் அமுத வாயின் நீர் தெறிப்ப உமிழ்ந்தார்.