பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சீறாவில் காணப்படும் இஸ்லாமிய மரபுகள்

எம். சையத் முஹம்மத் (ஹஸன்)

சீறாப்புராணத்தின் காப்பிய நாயகர் இஸ்லாமிய நெறியை நிலைநிறுத்த வந்தவர்கள் ஆதலின், உமறுப்புலவர், தமது காப்பியத்தில் இஸ்லாமிய மரபுகளுக்கு மாறான கருத்துகள் இடம்பெறலாகாது என்பதிலும். இஸ்லாமி யருக்கே-முஸ்லிம்களுக்கே உரித்தான மரபுகள் ஆங்காங்கே இடம் பெற வேண்டும் என்பதிலும் கண்ணுங் கருத்துமாக இருந்திருக்கிறார்.

எனவே, சீறாப்புராணத்தை முழுமையாக உணர்ந்து ரசிப்பதற்கு அதனைக் கற்க விரும்புவோர் இஸ்லாமிய மரபுகளைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துக் கொள்வது பெரிதும் உதவும். அவ்வாறு அதற்கு உதவும் வகையில் தனியாக ஒரு முழு நூலே எழுதலாம். அதற்குக் சீறாப்புராணத்திற்கு உரைநூல்கள் கிடைப்பது அரிதாக இருப்பதால், அப்படிப்பட்ட சில துணைநூல்களாவது வெளிவருவது அவசியமாகும்.

இஸ்லாமிய மரபுகளுக்கும் ஏனைய மரபுகளுக்கும் இடையே உள்ள சில வேற்றுமைகள் மிகவும் நுணுக்கமானவை.

உதாரணமாக, ஒருவரை ஒருவர் குறைந்த அல்லது கூடுதலான கால இடைவெளிக்குப்பின் சந்திக்கும்போதோ அல்லது முதல் தடவையாக சந்திக்கும்போது கூட முகமன் கூறிக்கொள்வது உலகெங்கிலும் எல்லா சமுதாயங்களிலும் எல்லா மொழிப் பிரிவினரிடையிலும் பழக்கமாக இருந்து வருகிறது.

முஸ்லிம்கள் கூறும் முகமனுக்கு "சலாம்" என்றும் சொல்லப்படும். அதன் முழு உருவம் "அஸ்ஸலாமு