பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

377

இலைமலி கதிர்வேல் 505 நாமவடிவேல் 457, ஒள் இலை வேள் 447, அரத்தம் உண்டு ஒளிரும் செவ்வேல் 198 என்பன அவற்றுள் சில.

(xii) காக்கைக்கு கண் ஒன்று என்னும் சங்க இலக்கிய மரபு ‘ஒரு கண் காகம்’ (751) என்ற தொடரால் தொடரப்படுகிறது. ‘காக்கைக் கண்மணி ஒன்றா விடுத்தார்’ என்னும் இராஜநாயகத் தொடர் ஈண்டு உணரற்பாலது.

வர்ணனைக் குறிப்பு

சின்னச் சீறாவில் சுரம், சூரியன், வாவி, தென்றல் மதீனா வள வர்ணனை, ஷாம், மிஸ்ர், உம்மான், ஏமன், இயற்கை, குதிரை, விழாக்கோலம், சுனைக்கா, ஆடு, மின்பர், தென்றல் போன்றவை, பொற்றமிழ்ச் சொற்களால் புது மெருகு பெறுகின்றன.

உருவகம்

சின்னச்சீறாவில் சிறந்து விளங்கும் உருவகங்களுக்கு ஒரு பாடல் சான்று காண்போம்.

மாறுகுபிர்ந கடல்திடறி உபநிடத உரம்போட்டு மறை ஏர் பூட்டி
மீறு இசுலாம் விதை விதைத்து கலிமா நீர்ப் பெய ஈமான் வேர்கள் ஊன்றித் தேறுநன்மைக் குறுத்துவிட்டு சுரகெனும்பொன் கதிர்ஈன்ற செழும்தீன் பைங்கூழ் ஆறுபடு மாபாகம் விளைத்தபுகழ் நபி அவனி ஆளும் நாளில் (441)

என்ற பாடலில், குயிர்கடல், உபநிடதம்-உரம்: மறை-ஏர்: இஸ்லாம். விதை: கலிமா-நீர்: ஈமான்-வேர்கள். நன்மை.