பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

381


"ஒராயிரம் ஹிஜிரி யைம்பத் திரண்டு ஷ அபான்
    ஒப்பற்ற தேதி ஒன்பதில்
பாராரும் புகழுற்ற நாகலா புரமதில்
    பரிமளச் குறைஷிக் குலத்தில்
பேராளன் மாப்பிள்ளை முகம்மது நெயினார்
    பிள்ளை யீன்ற கவிஞன்
சீராளன் உமறு அறுபத்து மூன்றெட்டில்
    சேர்ந்தான் சுவர்க்க நலமே"[1]

இப்பாடலில் உமறுவின் தோற்றம் ஹிஜ்றி 1052 (கி. பி. 1632) என்றும் அவர்தம் மறைவு "அறுபத்து மூன்றெட்டில்" என்றும் உள்ளது. இத்தொடரை 'அறுபத்து மூன்று வயதில் எட்டயபுரத்தில்' என்று பொருள் கொள்கிறார் திரு எம். ஆர். எம் அப்துர் றஹீம் அவர்கள், இதனையே "முஸ்லிம் முரசு" சிறப்பாசிரியர் பன்மொழிப்புலவர் திரு. எம். சையிது முகம்மது (ஹஸன் அவர்கள் 'அறுபத்து மூன்றெட்டில்' என்று பிரித்து அறுபதுடள் மூன்றெட் டான இருபத்து நான்கைக் கூட்டி 84 வயதில் மறைந்ததாகக் கூறுவர்.[2] மேற்கூறிய சான்றுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, இக் கூற்று சரியெனவே தோன்றுகின்றது. இவ்வனைத்தையும் நோக்கும்போது, உமறு சீறாவை முடித்த பின் கி. பி. 17 18 இல் மறைந்தார் என்று கொள்ளலாம்.

சீறாவின் ஆசிரியர் ஒருவரா? இருவரா?

இதன் தொடர்பாக இன்னொரு கருத்தையும் ஆய்தல் வேண்டும். சீறா முழுவதையும் உமறு பாடியிருக்க மாட்டார் என்பது அது. பனீ அகமது மரைக்காயர் இயற்றிய சின்னச் சீறாப் (1910) பதிப்பில் முன்னுரையில் 'சீறா உறனிக் கூட்டத்தார் படலம்வரை சில காரணச் சரித்திரங்களை மாத்திரம் மகாவித்துவான் உமறுப்புலவரவர்

  1. 1. அப்துற் றஹூம்-முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் அனுபந்தம் 4
  2. 2. தனி உரையாடல்.