பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384


அச்சிற் பதித்த வரலாறு

"பதங்களிற் பிறழ்ந்ததைப் பகுத்தும் பகாதும்
அதனமைதியே அமைத்துஞ் சிலசில
பாலுந் திணையும் இடனுப் பயில்லினாக்
காலமும் வறீஇயவை மயங்காது காத்துந்
தொகா நிலைத் தொகைநிலைத் தொடர்களுட் சிதைந்தவை
மிகா நிலையாக்கி விளங்கப் படுத்தியும்
வேற்றுமைப் பொருள்கள் வேறுபா டவைகளைத்
தோற்றிய முறைபோல் தொருத்தும் விரித்தும்
முற்று மெச்சமும் முடியாதனவற்றை
முற்ற முடித்தும் மொழிபெயர்த் தாக்கியும்
பொருட் டொடர் நோக்கி மொழித் தொடர் பொருத்தியும்
மருட்டுத் துறைகளின் மயக்க மொதுக்கியும்
புறமு மகமும் புணராத துறையொரு
புறமு மகமும் புகுதப் புகுத்தியும்
எதுகை மோனை இயைபாற் றிரிந்தவை
எதுகை மோனையைத் திரித்தியல் பாக்கியும்
இசைகெடா தெழுத்தின் இயல்பு நிரைத்தும்
அசை கெடா தமைத்தும் அணிபெறப் பொருந்தியும்
உவமை முதலா உள்ள அணிகளில்
நவநிலை பிறழா தவணிலைப் படுத்தியும்
இன்னமுஞ் சிதைந்தன எவற்றையு மாய்ந்தாய்ந்
துன்னிய விதிபோல் ஒழுங்குறத் திருத்திப்
பலபல பாடத்தாற் பரிசோதித்தும்
பலனுற வச்சிற் பதிப்பிக்கச் செய்தனன்
செய்கு அப்துல் காதிரென்று நாவலனே." [1]

  1. 1. இப்பாடல் முதல் பதிப்பில் மட்டுமின்றி 1857, 1884 போன்ற பல பதிப்புகளில் முழுவதுமாக அப்படியே சேர்க்கப்பட்டுள்ளது.