பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386

 புராணக் கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாடியுள்ளதாகத் தெரிகிறது. வேறு சில படிகளில் இப்பாடல் காணப் பெறாத காரணத்தால் இதனை இப்புராணத்தை முதன் முதல் அச்சேற்றிய சேகனாப் புலவரே பாடியிருக்கலாம் என்று கருதுவாருளர்.[1]


சீறாவைப் பதிப்பிடுவதற்குச் சேகனாப் புலவர் காயலிலிருந்து சென்னை நகருக்கு வந்து சேர்ந்தார். அவரும் உவைசு நயினார் லெப்பையும் இணைந்து சென்னைபுரசவாக்க வித்தியா விலாச அச்சுக்கூடத்தில் சீறாவை கி பி. 1842இல் முதல் பதிப்பைக் கொண்டு வந்தனர். இப்பதிப்பில் முகப்புப் பக்கம் அமைந்துள்ளதைப் போன்றே நூலின் கடைசிப் பக்கத்தையும் முகப்புப் பக்கத்தைப் போலவே பூ வேலைப் பாடுகளுடன் அச்சிட்டுள்ளனர். அதிலும் நூல் பெயர், ஆசிரியர், பதிப்பாசிரியர், பதிப்பித்த அச்சகம், ஆண்டு முதலியவற்றைக் கொடுத்துள்ளார்கள். அத்துடன் அப்பதிப்பை அச்சுக் கோத்தவர் பற்றிய குறிப்பும் "பா. கோவிந்து நாயக்கரால் அச்சடிக்கப்பட்டது" என்று கொடுக்கப் பெற்றுள்ளது. தமிழ் நூல்கள் வேறு எவற்றிலும் இல்லாத வகையில் சீறாப் பதிப்புகள் அனைத்திலுமே 19ஆம் நூற்றாண்டில் அச்சிட்ட பதிப்புகளில் நூலுக்கு முன்னும் பின்னும் இரு தலைப்புப் பக்கங்களுள்ளன.

இரண்டாம் பதிப்பு

1842இல் முதல் பதிப்பைக் கொண்டு வந்த சேகனாப் புலவர் சென்னை இராயபுரத்தில் 1843இல் மறைந்தார் ஆனால் அதற்கு முன் சீறாவின் இரண்டாம் பதிப்பைக் கொண்டு வந்துள்ளார். ஏறத்தாழ ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுக்குள் இரண்டாவது பதிப்பு வெளிவந்துள்ளது. முதல் பதிப்பைச் செம்மைபபடுத்தியபின் அவருக்குச் செம்மையான கையெழுத்துப பிரதி ஒன்று கிடைத்துள்ளது.

  1. 1. முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள், பக். 88