பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

389

இவை தவிர இக்காலத்தில் வேறு சில பதிப்புகளும் வந்துள்ளதாகத் தெரிகிறது. பார்வைக்குக் கிடைத்த வேறு மூன்று பிரதிகளில் முகப்புப் பக்கங்களில்லை.

1900 பதிப்பு

முதன்முதல் சீர்பிரித்துச் செம்மையான முறையில் பதிப்பித்த பெருமை காயல்பட்டிணத்தைச் சேர்ந்த கண்ணகுமது மகுதூ முகம்மதுப்புலவரவர்களையே சாரும். இவர் சென்னை முகம்மதிய புத்தகப் பரிபாலனத் தலைவராய்த் திகழ்ந்தவர்.

இவர் முஸ்லிம் தமிழ் இலக்கியத்திற்குச் செய்துள்ள தொண்டு அளவிடற்கரியதாகும். தங்கத் தமிழாம் சங்கந் தமிழைத் தமிழுலகிற்கு மீட்டுக்கொடுத்த டாக்டர் உ.வே. சாமிநாதையர் போன்று ஆங்காங்குச் சிறறிக்கிடந்த இஸ்லாமிய இலக்கியங்களைத் தேடிப்பிடித்து ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை இவர் பதிப்பித்துள்ளார்.

இவர் பதிப்பித்த சீறா சென்னை இட்டா பார்த்தசாரதி நாயுடு அவர்களால் தமது ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக் கூடத்தில் 1900 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது

முதன்முதலாக “உமறுப்புலவரவர்கள் பூர்வீக சரித்திரச் சுருக்கம் சீறாப்புராணம் செய்யப்பட்ட சாத்திரச்சுருக்கம்” ஆகியவை சீறாப்பதிப்பில் சேர்க்கப்பெற்றுள்ளன, பார்வைக்குக் கிடைத்த பழைய பதிப்புகளில் மிகத் தெளிவான பதிப்பு இதுவேயாகும்.

கோட்டாறு சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் அவர்கள் பதிப்பித்த சீறாப்புராணம் சென்னை ஸ்ரீ பத்மநாப விலாச அச்சுக் கூடத்தினர் வழி 1907 இல் வெளிவந்துள்ளது.

பிற பதிப்புகள்

இதனையொட்டிச் சென்னையிலிருந்து பி.நா. சிதம்பர முதலியார் & சன்ஸ், பி.என். இரத்தின நாயகர் & சன்ஸ்,