பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

401


என உவமையின் தோற்றத்தைத் தொல்காப்பியம் வகுத்துரைக்கின்றது. வினை, பயன், மெய், உரு ஆகிய நான்கினையும் பண்பு, தொழில், பயன் என மூன்றாக தண்டியலங்காரம் அடக்கிக் கூறும்.

பண்பும் தொழிலும் என்றவற்றின்,

"ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்ந்து
ஒப்புைமை தோன்றச் செப்புவது உவமை" [1]

உவமைகள் வெளிப்படை உவமம் எனவும் குறிப்பு உவமம் எனவும் இருவகைப்படும். வெளிப்படை உவமமும் விரி உவமம் எனவும் தொகை உவமம் எனவும் இருவகைம்படும். உவமையும் பொருளும் இரண்டறக்கலந்து சுருக்கமும் தெளிவும் தருவது உருவகம்

பார்க்கப் பலவாய் வேறுபட்டுத் தோன்றும் பல்வேறு பொருட்களையும் ஊன்றிப் பார்ப்பின் அவற்றிடையே ஒரு தொடர்பிருபபது புலப்படும். தொடர்புடைய பொருட்களை கண்டும் கேட்டும் அறிந்தும் அனுபவித்தும் அவற்றின் ஒப்புமையறிந்து கூறுவர் நுண்மாண் நுழை புலம் உடையோர், உயர்ந்த புலவர் உவமையை உவந்து போற்றுவர், உமறுப் புலவரும் உவமையைத் தம் காப்பியம் எங்கும் செந்தமிழ்ச் சீறாவில் தொட்ட இடமெல்லாம் உவமைகள் தட்டுப்படுகின்றன 56 பாடல்களைக் கொண்ட நாட்டுப் படலத்தில் 64 உவமைகள் 33 பாடல்களேயுள்ள தசைக்கட்டியைப் பெண்ணுருவமைத்த படலத்திலோ 87 உவமைகள் அமைந்துள்ளன

பேரரசர் முன் பராரி

அவையடக்கம் கூறுவது கவிவாணரின் மரபாகும். 'இராமன் திருக்கதையை நான் பாட முற்பட்டது பூனையொன்று பாற்கடலை நக்கிப் பருகிட முனைந்ததைப் போன்


26

  1. 1. சீறா. தண்டியலங்காரம் சூத்திரம் 31