பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



408


களே அன்னை ஆமினா பாலூட்டினார்) இதனைக் கூறவந்த இன்பத் தமிழ்க் கவிஞர்,

"சிலை நுதல் கயல்கண் ஆமினா என்னும்
செவ்விபூத் திருந்தபொன் மடந்தை
மலர்தலை உலகில் சுருதியை விளக்கும்
முகம்மது நபி நயினாரை
இலகிய கமலக் கரத்தினில் ஏந்தி
இருவிழி குளிர் தர நோக்கிப்
பலகலை அறிவும் கொடுப்பபோல் எழுநாள்
பால் முலை கொடுத்தனர் அன்றே." [1]

எனப் பாடிப் பரவசமடைகிறார். இதன் கண் 'சிலைநுதல்'கயல் கண் ', 'கமலக்கரம்’ ஆகிய மூன்று உவமைத் தொகைகள் அமைந்துள்ளன. 'பலகலை அறிவும் கொடுப்ப' போல் எனும் உவமையால் பெறப்படும் பிறப்புப் பொருளும் உண்டு.

நபிகள் நாயகம் பள்ளிசென்று பயிலாதவர்கள் இதனால் இவர்களை உம்மி நபிகள் என அழைப்பர், இவர்களின் பொறுப்போ வேதத்தின் விழுப்பொருளையெல்லாம் வையகத்து மக்களுக்கு விளக்கிக் காட்டுவதாகும். இதற்குப் பல கலை அறிவும் இன்றியமையாததன்றோ? இவ்வுணர்ச்சி கொண்ட கவிஞர் உவமையால் உள்ள நிறைவு கொள்ளு கின்றனர்.

நடையும் நலமும்

நாயகம் குழந்தையைப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்த பெருமை குனைன் நகரத்து அலிமா அம்மாவைச் சாரும். அவர்களின் வீட்டில் அண்ணலார் நாளொருமேனியாக வளர்பிறையென வளர்ந்து வருகிறார்கள் குழந்தை குறு குறு நடந்து தளர் நடைபயிலத் தொடங்குகிறது. இதனைக்

  1. 1. சீறா. நபியவதாரப் படலம் 116