பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

409

கவிஞர் கற்பனையால் கண்டு மகிழ்கின்றார். இதோ அந்த இன்பக் காட்சி!

எந்நிலம் அனைத்தும் தீன்நெறி நடப்ப
இயல்பெறு மனுநெறி நடப்பத்
துன்னிய அறத்தின் துறைவழி நடப்பத்
தன்பமற்று இன்பமே நடப்பப்
பன்னரும் செங்கோல் உலகெலாம் நடப்பப்
பாரினில் குலமுறை நடப்ப
மன்னியர் எவரும் சொற்படி நடப்ப
முகம்மது நபிநடந் தனரே.[1]

சன்மார்க்கமும் மனுநெறியும் அறத்துறைகளும் இன்பமும் செங்கோலாட்சி முறையும் குலமுறையும் மன்னியர் எவரும் சொல்படி செய்வதும் ஆகியவை நடப்பன போல் நாயகம் குழந்தை நடந்தது எனக் கொள்வோமாயின் இஃது எடுத்துக்காட்டு உவமை அணியாக அமையும், உவமைகள் அடுக்கிவரத் தொகுப்பது எடுத்துக்காட்டுவமை எனப்படும். உவம உருபு இல்லாமல் இருப்பது பெருவழக்கு.

கொடியும் குறிப்பும்

இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் புலவர்கள் தம் குறிப்பினை ஏற்றிக் காட்டி இன்பம் ஊட்டுவர் கொடிகளின் அசைவில் காப்பியக் கவிஞர்கள் தம் கற்பனைத் திறத்தைக் காட்டியுள்ளனர். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் ஒரு கொடிக் காட்சி: கோவலனும் கண்ணகியும் கெளந்தியடிகளுடன் கூடல் மாநகர் நோக்கிச் செல்கின்றனர் கோட்டை மதில்வேல் பாண்டி நாட்டுக் கொடிகள் பறக்கின்றன. மதுரையினுள் வந்தால் மங்கைக்கும் மணாளனுக்கும் வரும் துன்பங்களை ஐயமின்றி அறிந்து ‘வரவேண்டாம்! வரவேண்டாம்!’ என்பனபோல் மறித்துக் கை

  1. சீறா அலிமா முலையூட்டுப் படலம் 86