பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412


நாட்டுப் படலத்தில் மாடத்தின் மேல் பறக்கும் கொடி மதியின் மறுதுடைக்கும். சன்மார்க்கத்தை மறுக்கும் பகைவரின் மனநடுக்கத்தைக் காட்டும் மற்றொருவகைக் கொடி, இவ்வாறு சொடியசைவு முதலிய இயற்கைக் காட்சிகளில் கற்பனையை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணியாகும்.

செந்தாமரையும் அன்னப்பேடும்

உவமை வெளிப்படும் களங்களில் காதலும் ஒன்று, "பேரறிவு எவையும் செம்மை பெருத்தொளிர் வனப்பும் கொண்ட நாயக வாலிபருக்கும், பேரழகொழுகும் பெண்ணலங்கனியாகிய கதீஜா நாயகிக்கும் இடையே அன்பு அரும்பிக் காதலாக மலர்கின்றது. கவிஞர் இக் காதல் காட்சிகளைக் கண்ணியத்துடன் தீட்டிக் காட்டுகின்றார்.

வாணிபம் செய்யும் பொருட்டுப் பொருள் வேண்டி வரும் நாயகம் நாயகியைச் சந்திக்கிறார்கள். பேரொளி பரப்பிப் பொங்கிப் பெருகிய பெருமானாரின் அழகு வெள்ளத்தில் கதீஜா நாயகியின் கண்களாகிய கயல் மீன்கள் ஓடிக் குதித்து குளித்து மறுக்கமுறுகின்றன.'வைத்த விழி' வாங்கப் படாமையால் பூத்த கொம்பனைய தன் திரு மேனியில் நாணம் எனும் போர்வையைப் போர்த்தி மிகுந்த ஆசை "வெளிப்படாவண்ணம் கற்பென்னும் வேலயைக் கோலி உள்ளகத்து உணர்ச்சி காணாதவாறு வருந்தி நிற்கின்றார்" எனக் கவிஞரும் காதல் காட்சிகளை நாகரிகமுடன் காட்டுகின்றார்.

காக்குதற்கு உதித்த வள்ளல் காரிகை வடிவைக் கண்ணால் நோக்கியும் நோக்காதுபோல் எழுந்து மாதின் மாக்கடலனைய கண்ணும் மனமும் பின் தொடர்ந்து செல்ல வீடு செல்கிறார்கள். கதீஜா நாயகியும் காதலாகிக் கசிந் துருடிகின்றார்.