பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

413

“படியினில் சசியும் செங்கேழ்ப்
பரிதியும் நிகர் ஒவ்வாத
வடிவெடுத் தனைய வள்ளல்
முகம்மதின் நெஞ்சம் என்னும்
கடிகமழ் வாவி யூடு
கருத்தெனும் கமல நாப்பன்
பிடிநடைக் கதிஜா என்னும்
பெடை அனம் உறைந்தது அன்றே”[1]

சூரியனும் சந்திரனும் நிகரிலாத வடிவெடுத்த வள்ளல் நபியின் நெஞ்சம் என்னும் மணங்கமழும் தடாகத்தில் கருத்து என்னும் செந்தாமரையின் நடுவில் கிடிபோலும் நடையுடைய கதீஜா என்னும் அன்னப்பேடு உடைந்து விட்டது எனக் கூறும் இப்பாடலில் பொது தீங்கு உவமையும் உவமத் தொகையும் உருவகமும் பொருந்தியுள்ளன. அன்னம் இலக்கியத்தில் காணப்படும் இலட்சியப் பறவையாகும். வண்ணத்தில் சிறந்தது; தூய எண்ணத்திலும் உயர்ந்தது. இனிய நடைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது

இது வாழும் இடமும் உயந்ந்ததாகும்; இறைவதோ நிறத்தாலும் மணத்தாலும் வடிவாலும் ஒளிச்சிறப்பாலும் பொலிவாலும் சிறந்த செந்தாமரையில் எழிலுடன் அமர்ந்தது என்பதில்தான் எத்தனை அழகு! சிறப்பு! கடிகமழ் வாவி என்னும் தொடர் கடிமணத்தையும் திருமணத்தையும் கட்டியங் கூறுகிறது. ‘உறைந்தன்றே’ எனும் தொடரின் இறுதியில் வந்துள்ள ‘ஏ’ கார இடைச் சொல்லும் இதற்கு அரண் செய்கிறது. இப்பாடலின் ஏற்றவரின் இதயச் சிறப்பும், எண்ணச் சிறப்பும், நாயகியாரின் வடிவச் சிறப்பும், பண்ண்புச்சிறப்பும், காதல் சிறப்பும் கனிந்துள்ளன.

  1. சீறா. பாதை போந்த படலம் 47