பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


நல்ல செயல் எதனையும் தொடங்கு முன்பாக "அருளாளனும் அன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்னும் பொருளுடைய "பிஸ்மில்லாஹிர் ரஹ் மானிர் ரஹீம் என்று உரைத்தல் இஸ்லாமிய மரபு என்பதனை அனைவரும் அறிவர்.

ஆதிதனை உளத்திருத்தி பிசுமில் எனும்
;உரைதிருத்தி அமுதம் ஊறும்
வேதமெனும் புதுக்கானில் ஒரு சூறத்
தெடுத்தோதி விரிவதாக...

என வரும் உத்துபா வந்த படலம் (18 பாட்டிலுள்ள "பிஸ் மில்" எனும் சொல் "பிஸ்மில்லாஹி" என்று தொடங்கும் சொற்றொடரைச் சுருக்கமாகக் குறிக்கும் சொற்களில் ஒன்றாகும்.

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயத்தில் முதல் வசனம் 'அல் ஹம்துலில்லா ஹி...' என்று தொடங்குகிறது. எல்லாப் புகழும் அல்லாஹ்வக்கே என்பது இதன் பொருள் முஸ்லிம்களின் நாவில் நாள் தோறும் பல சந்தர்ப்பங்களிலும் தவழும் சொற்றொடர் இது. இன்னுமொரு தனிப்பட்ட சந்தர் பத்திலும் இது சொல்லப்படுகின்றது. ஒருவர் தும்மினால் உடனே "அல் ஹம்தி லில்லாஹ்" என்று அவர் கூறி கொள்வார். ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களைக் களிக்கண்ணினால் சிருட்டித்த இறைவன் தன் ஆவியை அதனிற் செலுத்த உயிர்பெற்ற ஆதம் நபி அவர்கள் முதலில் தும் மினார்கள் என்றும் அதைத் தொடர்ந்து 'அல்ஹம்துலில்லாஹ்' என்று சொன்னார்கள் என்றும், அதனை நினைவு கூறும் வகையில் ஒரு முஸ்லிம் தும்மியவுடன் அச்சொற்களைக் கூறவேண்டும் என்பதும் இஸ்லாமிய மரபு.

அவ்வாறு ஆதம (அலை) அவர்கள் படைக்கப்பட்டதை வாணிக்கும் பின்வரும் பாடலில் அச்சொற்கள் ஆளப்பட்டிருப்பதைக் காணலாம்.

"துண்டத்தின் ஆவி தோன்றத் தும்மலும் தோன்றிப்பின்பு விண்டுரை பகரு நாவின் மேவியல் ஹம்தை ஒதிக்