பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

415


'தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’

ஈண்டுக் காட்சி வழங்குகின்றாள்.

தருவினம் வெருவிடக் கிடக்கும்

பசுமைப் புரட்சியில் நம் நாடு ஈடுபட்டுள்ளது; வெற்றியும் பெற்று வருகிறது; பயிர் வளர்ச்சியில் உயர்ச்சி காண பல நாட்டு முறைகளையும் பின்பற்றுகின்றனர். இவற்றில் ஜப்பான் நாட்டு நடவு முறையும் ஒன்று. இம்முறையில் கயிறு கட்டி நாற்றுக்களை வரிசை வரிசையாக நடுவர். பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன் கலக்க இருப்பதால் பயிர்கள் படர்ந்து வளர்ந்து பயனளிக்கும். இதனை உமறுப்புலவர் நாட்டுப் படலத்தில் தீட்டி மகிழ்கின்றனர்.

"வரிசையிற் செறிந்த நிறைபசுஞ் சாலி
வளர் கிளைக் கிளையெனக் கிளைத்துப்
பெருகுசூல் முதிர்ந்து ஈன்று ஆரமுது உறைந்து
பிடர் குனி தரக்குலை சேர்ந்து
சொரிகதிர்ப் பவள நிறம்பல படைத்துச்
சுடர்மணி முத்தினம் தெறிப்பத்
தரையினில் படிந்தே அருட்கடை சுரந்த
தருவினம் வெருவிடக் கிடக்கும்." [1]

இப்பாடலில் வேண்டியவற்றை வேண்டியாங்கு தரும் கற்பகத் தருவும் அஞ்சியோடும்படி நெற்பயிர் செழித்துக் கிடக்கும் எனக் குறிப்பிடுகின்றார். இவ்வாறு உவமைக்குரியவற்றை குறைத்தும் பகுத்தும் கூறுவது நிந்தை உவமை எனப்படும்.

உவமையும் வியப்பும்

வலிமைச் சிறப்பையும் வளமார்ந்த உவமைகளால் விளக்குகிறார் உமறு, பெருமானார் பொன்னெறி பரப்பிய

  1. 1. சீறா நாட்டுப் படலம் 36