பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



417


சூரிய சந்திரர்களைக் தூளாக்குதற்கோ இமயப் மெருமலையைத் தகர்ப்பதற்கோ, பூமியைப் பிளப்பதற்கோ பகைவர் ஊரை அந்தரத்தில் எறிவதற்கோ பரிந்து செல்லும் குதிரை அடியெடுத்து வைத்து அம்மா !” என்று வியப்புணர்ச்சியும் ஐயமும் தோன்ற அமைந்திருப்பதில் மாட்கை உவமையும் ஐய உவமையும் இணைந்து இன்பம் சேர்க்கின்றன.

மொழியும் பழியும்

தசைக்கட்டியைப் பெண்ணுருவாக்கிய படலம் உவமை நலத்தையும் கற்பனைத் திறத்தையும் வர்ணனை வனப்பையும் வெளிப்படுத்தும் களமாக அமைந்துள்ளது. அன்னை ஆமினா, கதீஜா நாயகி, பாத்திமா நாயகி முதலிய பாத்திரங்களை வரம்பிகந்து வர்ணிப்பது வரவேற்கத் தக்கதன்று. கவிஞர்க்குரிய கற்பனையைக் கட்டுப்படுத்த முடியுமா? எனவே தசைக்கட்டியைப் பெண்ணுருவாக்கிய படலத்தைப் படைத்துப் பயன்படுத்துகிறார் உமறுப்புலவர். கேசாதி பாத வர்ணனையை வியக்கும் வண்ணம் தீட்டிக் காட்டுகின்றார். முடிமுதல் அடிகளிலும் உள்ள உறுப்புகளின் சிறப்பை யெல்லாம் அழகு திகழ வர்ணிக்கின்றார்,

தசைக்கட்டியாக இருந்த ஹபீபு அரசரின் மகள் வேந்தரின் வேண்டுகோளுக்கிணங்க பெருமானார் பிரார்த்தனையால் பேரழகு ஒழுகும் பருவமங்கையாக உருவெடுத்து விடுகின்றாள். அவ்வழகு, நங்கையின் இனிய சொல் நலங்குறித்து ஒரு வர்ணனையை ஈண்டு காண்போம்.

"டாலென வெளிறாக் கணியென அழியாப்
    பகட்டல் தேனெனச் சிதறா
வேலவார் குழலார் செழுங்கரத்து ஏந்தும்
    இளங்கிளி மொழியெனக் குழறா
வேலைவாழ் அமுதம் பிறந்தென உலகம்
    விளங்கிடப் பொன்மழை பொழியச்

27