பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

சிற்றிலக்கியங்களை வரவேற்றுச் சிறப்புச் செய்து கொண்டிருந்தது.

இந்தச் சேது நாட்டின் - இராமநாதபுரச் சீமையின் ஆட்சியைப் பரிபாலிக்கின்ற அமைச்சராக-திவானாக-திகழ்ந்தார் செய்யது அப்துல் காதிர் என்கின்ற 'சீதக்காதி' வள்ளல்.

அந்தத் தமிழ்க்குடி மகாகிய இஸ்லாமிய இளைஞருக்கு,தமிழ்த் தாயின் தவிப்பு விளங்கிற்று. அவளது ஆவலைப் பூர்த்தி செய்கின்ற ஆர்வம் தோன்றிற்று!காவியம் பாடி, கன்னித் தமிழ்த் தாய் செய்வதற்குரிய கதைக்கு வேண்டிய கருப்பொருள் இருப்பதும் தெரிந்தது. தக்க கவிஞரைத் தேடினார். கிடைத்தார் கவிஞர். சோதித்தார்-அவரை. கம்பனின் வாரிசாக, கன்னித் தமிழின் மரபு கெடாமல், உயரிய தடையில், இனிய காவியம் படைத்தளிக்கின்ற இளம் கவிஞராக, புலவராக உமறு என்கின்ற பெயரினைத் தாங்கிய அருமாமணி கிடைத்தார். அணைத்து மகிழ்ந்து தனது ஊராகிய கீழக்கரைக்குக் கொணர்ந்து, சீறாப்புராணம் என்கின்ற கற்கண்டுக் காவியத்தை, தமிழிலே பாடி அளிக்கப் பணித்தார் அவரை வள்ளல் சீதக்காதி

பொருள் புதிது (தீனும், முகம்மது (சல்) வாழ்க்கையும்) சொல் புதிது. சொல்லுகின்ற முறையும் புதிது. ஆனால், அத்தனையும் தமிழ் என்கின்ற தேனில் தோய்த்தெடுத்த பேரீத்தம் கனிகள்!

தமிழகத்தின் வட மாவட்டங்கள் போர்க்களங்களாகிக் கொண்டிருந்தன. படை கொண்டு வந்தவர்கள் முஸ்லிம் மன்னர்கள் மட்டுமன்று. மராத்தி, தெலுங்கு, கன்னட மனனர்களாகவும் இருந்தார்கள், ஆங்கிலோ, ஃபிரெஞ்சு நாட்டுக் கிருத்துவர்களும் விளங்கினர் நடந்தது மதத் போராட்டங்கள் அன்று. மண்ணை ஆளுகின்ற ஆசைப் போராட்டங்கள். இந்த நிலை தமிழக வட மாவட்டங்களிலென்றால், மதுரை, தஞ்சை நாயக்க அரசுகள் இந்தப் போராட்டங்களுக்கு உதவுபவையாகவோ அல்லது அந்த