பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்பவைகளாகவோ திகழ்ந்தன என்றால், கவலையற்று சேது நாடு கன்னித் தமிழ் வளர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. ஆம். காலத்தையும் வென்று நிற்கக்கூடிய காவிய படைப்பில் சீதாக்காதி ஈடுபட்டிருந்தார். அவர் சேது நாட்டு மன்னரின் அமைச்சர் தமிழ் வளர்ப்பில் அரசருடன் போட்டியிட்டு, அவரையும் விஞ்சுபவராய் விளங்கினார். ஆம்,உலக மகா கவிகளில் ஒருவராக உமறுப் புலவரை உருவாக்கிக் கொண்டிருந்தார்; அழகிய தமிழ் பேசும் உமறுப் புலவரின் கிஞ்சுக வாய் சீறாப்புராணத்திற்கான விருத்தப்பாடலை முணகிக் கொண்டிருந்தது......


திருவினுந் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்
தெளிவினும் தெளிவதாய்ச் சிறந்த
மருவினு மருவா யணுவினுக் கணுவாய்
மதித் திடாப் பேரொளி யனைத்தும்
பொருளினும் பொருளா வடிவினும் வடிவாய்ப்
பூதலத் துறைந்தபல் லுயிரின்
கருவினுங் கருவாய்ப் பெருந்தலம் புரந்த
கருத்தனைப் பொருந்துதல் கத்தே! ..

புரிந்த-பழைய-சொற்கள். ஆனால் புதிய வடிவம், புரிந்த பொருள்தான் - உருவமற்ற ஒரிறைவள் என்பது, ஆனால் படையெடுத்து வந்த உருவ வணக்கத்தாலும், ஒராயிரம் கற்பனைக் கடவுள் கதைகளாலும், தமிழக மக்களின் மனத்திலிருந்து மறைந்துவிட்ட பொருள் ஓரிறைவன் நெறி ஆக, மறைந்துவிட்ட பழைய நெறியைப் புதுப்பிக்க வந்த முகம்மது (சல்) அவர்களின் வரலாற்றை பாடத் துவங்கும் போதே உரிய வகையில், புதிய கவிதையில், புனைந்து தருகிறார் உமறுப்புலவர். இது மகா கவிகட்கு இருக்கவேண்டிய தகுதி-திறமை-ஆற்றல் ஆகும்.

புதிய பொருளைச் சொல்லவில்லை, புதிய சொற்களில் புரியாத சொற்களில் கூறவில்லை! ஆனால், இதயங்கள்-எல்லாச் சமயத்தார்களின் இதயங்களும்தான் - ஏற்கின்ற