பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

னால் மட்டும் போகாது. உருவத்திற்குறிய சொற்களாலும் உருவமற்ற இறைவனைப் பாடக் கூடாது என்பதேயாகும்.

இசையிட்டுப் பாடுவோர் விரும்புவது, இது போன்று இசையிட்டுப் பாடக் கூடிய பாடல்களை, தமிழ்ப் புலவர்கள் பாடியருள வேண்டும் என்பதுதான்.

மொருளுணர்ந்து ரசிப்பவர்கள், இத்தகு பொருள் நயம் பொதிந்த பாடல்களைத் தமிழ்ப் புலவர்கள் அனைவரும் பாடியருள வேண்டும் என்பதே!

இந்தப் பாடலை, இன்னொரு கோணத்தில் காண்போம்.

தமிழில் அணி இலக்கண விரிவுரை-விளக்கவுரையாளர்கள், விளக்கணிக்கு விளக்கம் கூறும் போது, மேற்கோள் செய்யுளாகப் பெருங்காப்பியங்களில் உள்ள பாடல்களில் எது ஒன்றையேனும் சுட்டிச்காட்டி விளக்கம் உரைத்துள்ள அணி இலக்கண நூல் எதுவும் இதுவரை வெளிவந்திருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை அத்தகைய பாடல்கள், அவர்கள் படித்த காவியங்களில் இல்லையோ என்னவோ! உமறுப்புலவர் இயற்றியருளியுள்ள சீறாப்புராணததின் முதல் பாடலாகத் திகழ்கின்ற மேலேயுள்ள "திருவினும் திருவாய்..." என்று ஆரம்பிக்கின்ற பாடலே விளககணிக்கு ஏற்ற பாடலாகத் திகழ்கின்றது.

'விளக்கணி விளக்கம்’ என்பது, ஒரு பாடலில் உள்ள ஒரு வார்த்தையையோ, ஒரு வரியினையோ, இடையிலோ, கடைசியிலோ, எந்த இடத்திலிருந்தோ எடுத்துக் கொண்டு பாட்டு முழுமையும், பொருள் புரியும் தன்மையில், எடுத்து உரைத்து விளக்குவதாகும், "திருவினும் திருவாய்...' என்ற சொற்றொடருடன் துவக்கமாகின்ற உமறு தரும் சீறாப்புராணப் பாடல் இந்த வகையில் அமைந்திருக்கின்ற தன்மை காணுவோம்.

இந்தப் பாடலின் முடிவில் உள்ள சொற்கள், "கருத்தனைப் பொருத்துதல் கருத்தே' என்பதாகும். இந்த இறுதிச்சொற்களை, இறுதியில் அமைத்து பாடல் முழுவதை