பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51


கிறது. அந்த அழகு வெள்ளத்தின் முன்னே கதீஜா நாயகியின் கரிய விழிகள் மீன்களாகி விடுகின்றன. அண்ணலின் முகமாகிய அழகு வெள்ளத்தை நோக்கி நாயகியின் கண்கள் கயல்களாகத் துள்ளிக் குதித்தோடி அந்த வெள்ளத்தோடு கலந்து விடுகிறது.

பேரொளி பரப்பிப் பெருகிய வழகு வெள்ளச்
சார்பினிற் கதீஜா வென்னுந் தையல்தன் கரியவாட்கண்
கூருடைக்கயல்களோடிக் குதித்தன குளித்துத் தேக்கி
வாரிய வதனஞ் சேர்ந்து மறுக்க முற்றிருந்தவன்றே'

அடுத்தது என்ன?

பார்த்த கண் பார்த்தபடியே இருந்தது பார்வை மீட்டுக் கொள்ள முடியாத நிலை. அதே சமயம் நாயகியை நாணம் சூழ்ந்து கொள்கிறது தம் ஆசை வெளிப்பட்டு விடக் கூடாதல்லவா? நாணம் என்ற போர்வையைப் போர்த்திக் கொள்கிறார். கற்பெனும் வேலியை உடனடியாக அமைத் துக்கொண்டு விடுகிறார். மனச் சஞ்சலத்தை வெகு நாகரிகமாக மறைத்துக்கொண்டு விடுகிறார் என்றாலும் நாயகியின் நெஞ்சில் ஒரு மயக்கம்; கலக்கம்.

"பார்த்த கண் பறித்து வாங்கப் படாமையால்நறவஞ் சிந்தப்
பூத்த கொம்ப னைய மெய்யினால் நாணெனும் போர்வை போர்ததக்
கூர்த்தவா வெளிப்படாமல் கற்பெனும் வேலி கோலிச்
சேர்த்ததம் முளங்காணாது திருந்திழைவருந்தி நின்றார்."

தலைவரின் நிலை என்ன?

நாயகியை சந்திக்க வந்தவர் அவரைப் பார்க்காமல் இருக்க முடியுமா? பார்க்கிறார். பார்த்துக் கொண்டேயிருக்க முடியாதல்லவா? கதீஜா நாயகியின் வடிவைக் கண்ணால் பார்த்தும் பார்க்காதவர் போல், அதாவது நோக்கியும் நோக்காததும் போல் இருக்கிறார் அண்ணல். பார்வையை