பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


நீளவிட்டால் அவர்தம் பெருமைக்குக் குறைவாகி விடும்.எனவே நொடிப்பொழுதில் பார்வையைத் திருப்பிக் கொண்டு விடுகிறார். ஆனால் மனம்...? தாயகியிடம் விடைப் பெற்று கொண்டு வீதிக்கு வந்தபிறகும் அந்த மாதரசியின் உருவம் மனத்தில் தொடர்கிறது நாயகியின் பார்வை அவர்களைத் தொடர்ந்து வர வீதியிலே நடத்து வருகிறார் தலைவர். கதீஜா பிராட்டியின் கடலனைய கண்ணும் மனமும் பின் கொடர்ந்து வருகிறாராம்

"காக்குதற்குதித்த வள்ளல் காரிகை வடிவைக்கண்ணால்
நோக்கியும் நோக்காதும் போல் நொடியினினெழுந்தம் மாதின்
மாக்கடல னையகண்ணும் மனமும் பின்தொடர்ந்துசெல்வக்
கோக்குல வீதி நீந்திக் கொழுமனையிடத்திற்சேர்ந்தார் ’’

நாயக.நாயகியரின் சந்திப்பை வரம்புக்குட்பட்டு எல்லை மீறாத இனிமையுடன் இயல்பாகச் சித்தரித்துக் காட்டுகிறார் உமறுப்புலவர். உமறு வின் எழுத்தாணி முறையாக இயங்குகிறது. கத்தி முனையில் நிறுத்தப்பட்டிருப்பதை உணர்ந்திருப்பதால்தான் அவர் காதலை காமச் சித்திர மாக்கி விடாமல் புனிதப் பொருளாக கையாண்டிருக்கிறார்.

உமறுவின் ஆவல் அடங்கவில்லை, இன்பச் சுவையை இன்னும் பாட இடம் கிடைக்காதா என்ற துடிப்புடன் களங்களை தேடுகிறார். முயற்சி வீண் போகவில்லை . தலைவன் தலைவியைப் பற்றித் தானே புனைந்துரைக்கக் கூடாது! வீதியிலே பெண்டிர்கள் இருக்கிறார்கள் பேதை முதல் பேரிளம் பெண்வரை ஏழு பருவ மகளிரும் எங்கனும் உலவுவார்களே, அவர்களின் எழிலை, இதய உணர்ச்சிகளை, மெய்ப்பாடுகளைப் பாடித் தீர்த்துவிட்டால் நெருங்கிய சுவையும் பாவமும் அமைந்துவிடுமல்லவா?