பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


யும் முறையே, 'பொன்னகர்’ பூமி என்றும். 'பொன்னுலகு' என்றும் வர்ணிக்கின்றனர். உமறுப் புலவரின் நோக்கில் மக்கா நகரம் எப்படியிருக்கிறது தெரியுமா? '...பொன்னுலகம் எட்டும் ஒன்றெனத் திரண்டு வந்திருந்ததொத்திருக்கும்’ என்று பாடுகிறார்.

உமறுவின் இலட்சிய நாட்டில் மக்கள் மனதில் உயர்ந்த சிந்தனை இருக்கிறது. நிந்தனை இல்லை. மக்கள் மதுவருந்துவதில்லை. அருந்துவோர் யாராவது உண்டா என்றால் 'உண்டு' என்ற பதிலும் இருக்கிறது. ஆமாம், வண்டினங்கள் மலரின் மதுவை அருந்தும் காட்சியை மட்டுமே காணலாம். பொய் உண்டா? இல்லை, ஆனால் ஒரு பொய் மட்டும் உண்டு ஏன் ஊடல் கொண்ட பெண்டிரை அமைதிப்படுத்துவதற்காக ஆண்கள் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. அவ்வளவுதான். கொலையோ களவோ அந்த நாட்டில் இல்லை. இருப்பதெல்லாம் பழக்குலைகள்தான்.

"நினைக்கும் பொற்பொருளே நிந்தனை மற்றோர்
நிந்தனை சிந்தனை இலையே
இனக்கருஞ் சுரும்பு மதுத் துளி அருந்தும்
இவை அலால் மதுப்பிரிது இலையே
சினக்கரி முனைக்கொட்டிள முலைப்புலவி
திருத்தும் பொய்யலது பொய் இலையே
வணக்கனி கருத்த குலைக்களவு அலது
மறுத்தொரு கொலைக்களவு இலையே"

என்பது உமறுவின் குரல். காவியங்களில் நாட்டு, நகரப் படலங்களில் இத்தகைய புத்துலகக் காட்சிகள் சமைக்கப்படுவது இயல்பு. உமறுப் புலவரும் அந்த மரபைப் பின் ற்றிப் பாடியிருக்கிறார் என்றாலும், இஸ்லாமிய நெறியை இலைமறைகாயாக எப்படி இங்கே அமைத்திருக்கிறார் என் தைக் கவனிக்க வேண்டும். 'மதுப்பிறிது இலையே' என்ற சொற்றொடர் அழுத்தமான கருத்தை வலியுறுத்துகிறது. இஸ்லாம் மதுப்பழக்கத்தை ஏற்கவில்லை. ஆகவே, மது