பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


வில்லாத நாட்டை உமறு படைத்துச்காட்ட வேண்டுமல்லவா? நுட்பமான கருத்துகளை இப்படி இயன்ற போதெல்லாம் அவர் எடுத்துச்சொல்கிறார்,

சொல்லாட்சியிலும் உமறுவின் தனித்திறன் துள்ளி வரக் காணலாம். ஒரு புதிய மணிப்பிரவாளத்தை அளவாகவும் அழகாகவும் பயன்படுத்திய பெருமை உமறுப் புலவருக்கு உண்டு. தமிழும் வடமொழியும் மணியும் பவளமும் போல் கலந்து எழுதப்பட்ட ஒரு மொழி நடை மணிப்பிரவாளம் என்று அழைக்கப்பட்டது. உமறுப் புலவருக்க இதிலிருந்து சற்று மாறுபட்ட ஒரு நிலை. அரபு மொழிச் சொற்களைப் பெரும் எண்ணிக்கையில் பயன்படுத்த வேண்டிய ஒரு கட்டாய நிலைமைக்கு உட்படுகிறார். இஸ்லாமியத் தமிழ்க் காப்பியமாகையால் அரபுமொழிச் சொற்களை அவரால் தவிர்க்க இயலாது. தேவையான இடங்களில் அரபுச் சொற்களை அப்படியப்படியே பெய்தால்தான் இஸ்லாமிய மணமும் பின்னணியும் இருக்கும். அதே சமயம், காவியத்தைப் படிப்பவர்கள் தமிழ் மக்கள் ஆகை யால் தமிழ்க் காவிய நலன்களுக்கு அரபுச் சொற்கள் தடை யாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது. இந்தச் சோதனைக்கு உட்பட்ட முதல் முஸ்லிம் தமிழ்க் காவியப் புலவர் உமறு என்று சொல்லலாம்.

அரபுமொழிச் சொற்கள் பயின்று வருவதால் சீறாப் புராணத்தை தமிழ் முஸ்லிம் அல்லாதார் படித்துச் சுவைக்க இயலாது என்று சொல்பவர்கள் உண்டு. இது சரியான கண்ணோட்டமன்று உமறுப்புலவர் அதற்கு இடம் வைக்கவில்லை. சொல்லின் பொருளை சூழ்நிலையினால் விளங்க வைக்கும் தனிப்பெரும் ஆற்றல் உமறுவுக்குக் கைவந்த கலை. சுஜூது, மலக்கு, கலிமா, தீன், திக்று, ஈமான், போன்ற சொற்களும், கதை மாந்தர்களின் அரபுப் பெயர்களும், இடங்களின் பெயர்களும் காவியத்தில் விரவி வருகின்றன. அரபு மொழிச் சொற் பயிற்சி இல்லாதவர்கள் இவற்றை