பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


எப்படி உணாந்து கொள்ள முடியும்? இஸ்லாமியத் தமிழ்க் காப்பியம் என்பதால் அரபுச் சொற்களைப் புலவரால் புறக்கணிக்க முடியாது. அவற்றின் பொருளையும் புரிய வைக்க வேண்டும். இதற்கு ஓர் அரிய உத்தியை சீறாப் புலவர் பின் பற்றுகிறார். முதலில் அரபுச் சொல்லை தன் விருப்பம் போல் எடுத்தாள்கிறார். அடுத்து இனிய தமிழ்ச் சொற்களைப் பெய்து முதலில் கூறிய அரபுச் சொல்லின் பொருளை அழகுற விளங்க வைக்கிறார். சில இடங்களில் சூழ் நிலையைக் கொண்டு அப்பாலும் இப்பாலும் போகாமலேயே பொருளை உணர்த்தி விடுகிறார் புலவர்.

"மறையின் மிக்கவர் ஒதிய ஓசையும், வரிசைத்
துறவின் மிக்கவர் 'திக்கிரின்' ஒசையும் சூழ்ந்தே
இறைவனைத் தொழுது இருகையும் ஏந்திய 'ஆமீன்'
முறை முறைப்படி கூறிய ஓசையும் முழங்கும்'

உமறு காட்டும் நாட்டில் நாளெல்லாம் ஓசைகள். என்ன ஒசை? வேத ஒசை, தியான ஓசை, பிரார்த்தனை ஒலி. புனித பூமியல்லவா? அங்கே திருமறையை மக்கள் ஒதிய வண்ணம் இருப்பதால் நாளெல்லாம் அந்த ஒசை கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஞானியரின் தியான ஒசையை திக்று' ஒலி கேட்கிறது. இரு கைகளையும் ஏந்தி இறைவனிடம் இறைஞ்சுவோரின் 'ஆமீன் ஒலி அவ்வண்ணமே ஆகுக-எனும் ஒலி கேட்கிறது.

திக்று: ஆமீன் ஆகிய அரபுச் சொற்களின் பொருட்களை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. திருக்குர்ஆன் ஓதும் ஓசையையும், திக்று எனப்படும் தியான ஓசையையும் அழியாத காவிய ஒசையாக்கி விடும் திறன் உமறுப் புலவருக்கு மட்டுமே வாய்த்த ஒன்று.

"...அடலுறு மக்கட்கெல்லாம் ஆதிபதி ஆதத்துக்கே
இடமுறும் அமரர் யாரும் சுஜூது செய்திடுகவென்றான்"

என்பது தலைமுறைப் படலத்தில் ஓர் இடம், 'சுஜூது’ என்ற