பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60


களின் தலைவர் என்பது தெரியவரும். 'திறலுறு ஜிபுரயில்’ என்று சொல்லி 'ஜிபுரயில்’ எனும் பெயர் மனத்தில் நிலை பெறுமாறு செய்துவிடுகிறார். சத்தக் குழிப்புகளைச் சொந்தமாக்கிக் கொண்டு 'ஜாலம்' புரிகிறார். 'அபுபக்கர்' என்ற பெயர் தமிழ்ச்சொல் அன்று. இத்தகைய சொற்கள் சந்தக் குழிப்புக்கு ஏற்ப வரும்போது தமிழ்ச் சொற்கள்போல் ஆகி விடும் எனவே 'தபுதக்க' என்று சந்கக் குழிப்பைப் பயன்படுத்தி அபுபக்கர் என்ற சொல்லை தொடர்ந்து வரச் செய்கிறார். இதுபோன்ற இடங்களுக்கு சந்த விருத்தப் பாடல்களை அமைத்துக் கொண்டு விடுகிறார் உமறுப்புலவர் அரபு மொழிச் சொற்சளும் பெயர்களும் தமிழ்க் காவியத்தில் இணைந்துவர உமறுப் புலவர் பின்பற்றியுள்ள ஓர் இனிய உத்தி இது.

இன்பச் சுமையை ஒர் எல்லைக்குள் நின்று பாடி தனது தனித் திறனை நிலைநாட்டிக் கொண்டுள்ள சீறாக்காவியப் புலவர் நாற்பொருட்களில் இறுதியான 'வீடு' பற்றிப் பாடியிருக்கிறாரா என்பது ஆராய்ச்சிக்குரிய ஒர் அம்சம், சீறாவைப்பற்றிக் கூறும் பெரும் புலவர் சேகனா. 'அறம் பொருள் இன்பம் வீடனைத்தும் அடங்கிய கிறம்பெறும் காப்பியம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். 'வீடு' பற்றிய செய்திகளை ஒரு காண்டம் அமைத்து காவீயப் புலவன் பாட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.காவியத்தில் ஆங்காங்கே அவற்றை அமைத்துச் சென்றாலும் ஏற்கத்தக்கதேயாகும். சீறாப் புராணத்தில் 'வீடு' குறித்துப் பேசும் பாடல்கள் தீன் நிலைக்கண்ட படலம், புத்து பேசிய படலம், தொழுகை வந்த வரலாற்றுப் படலம் முதலானவற்றில் இடம் பெற்றி ருக்கின்றன.

"வானமும் புவியும் மற்றும் வகுத்தவன் உண்மைத்துTதர்
ஆனவர் முகம்ம தென் பார் அவர் மொழி மறாது நின்றோர்
ஈனமில் சுவன நன்னாடு எய்துவர் எங்கட்கு உற்ற
தீன்நிலை பொய்மை என்ற தேவரும நரகம் சேர்வார்.'"