பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


சீறாவைப் புராணம் என்று கூறுவதைவிடக் காவியம் என்று கூறுவதே பொருத்கமாகும். சீறாப்புராணம் காவியப் பண்புடையது காவியத்தில் அறம், பொருள் , இன்பம், வீடு, என்னும் நான்கு பொருள்கள் கூறப்படுகின்றன. சீறாப்புராணத்திலும் இந்த நான்கு பொருள்கள் கூறப்படுகின்றன. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள் களையும் தனியே கூறும் நூல்களைக் கீழ்க் கணக்கு என்பர். இந்த நாற் பொருளையும் தனித்தனியே விதந்து கூறாமல், காவியப் போக்கில், கதை அல்லது வரலாற்றோடு இடையிடையே இவைகளைப் கூறுவது காவியப் பண்பாகும்.

இஸ்லாம் மதத்தைப் பரப்பின நபிநாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது சீறாப்புராணம். முகம்மது நபி (சல்) அவர்களும் இஸ்லாம் மதமும் அரபு நாட்டில் தோன்றினபடியால் இவர்களின் சிறப்பைக் கூறுகிற சீறாப் புராணத்தில் அரபு மொழிச் சொற்கள் கலந்திருப்பது தவிர்க்க முடியாத இயற்கையாகும். இஸ்லாம் மதத்தின் வேதமான குர்ஆன் நூலும் அரபு மொழியில் எழுதப் பட்டுள்ளது. முஸ்லிம்கள் எல்லோரும் அரபு மொழிக் குர் ஆனையே ஒதுகிறார்கள். ஆகவே சீறாப்புராணத்தில் அரபு மொழிச் சொற்களை நிறையக் காண்கிறோம்.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்கள் காவிய நூல்களில் இடம்பெற வேண்டும் என்னும் மரபு உள்ளதைக் கூறினோம். இவற்றில் வீடு என்பதைப் பற்றி ஒரு விளக்கம் கூறவேண்டும். வீடு அல்லது மோட்சம் என்பது மதங்களை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே காவியப் புலவரின் சமயக் கொள்கைப்படி அக்காவியத்தில் வீட்டு நெறி வெவ்வேறாகக் கூறப்படுவது வழக்கம். உதாரணமாக ஜைனப் புலவர் தம்முடைய காவியத்தில் வீட்டைப் பற்றிக் கூறும்போது அதை ஜைன சமய நெறிபடக் கூறுவர். பெளத்தமதக் காவியம் இயற்றுவோர் வீட்டு நெறியைக் கூறும்போது அதைத் தம்முடைய பெளத்த நெறிப்படிக் கூறுவர்? அது போலவே சைவ, வைணவக் காவியம் இயற்று