பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

பொதுவானாலும், இவர் பாடுகிற நாட்டுவளம் தமிழ் நாட்டின் வளத்தையே நினைவூட்டுகிறது. குறிஞ்சி நிலத்து மலைகளிலே மழைபொழிய அதன் வெள்ளம் அங்குள்ள பொருள்களை அடித்துக் கொண்டு போய் முல்லை நிலத்தில் சேர்த்து, முல்லை நிலததுப் பொருள்களை அடித்துக்கொண்டு போய் மருத நிலத்தில் சேர்த்து, மருத நிலத்துப் பொருள்களை அடித்துக் கொண்டு போய் பாலை நிலத்தில் சேர்த்து, பாலை நிலத்துப் பொருள்களை நெய்தல் நிலத்தில் சேர்த்தது என்று வழக்கமாகத் தமிழ் நாட்டு வளம் கூறப்படுவது போலத் தான் உமறுப் புலவரின் நாட்டுவள வருணனை காணப்படுகிறது, உமறுப் புலவர் அரபு நாட்டின இயற்கைக் சூழ்நிலையை அறியாதவர் என்பது இதனால் தெரிகிறது. அரபு நாட்டுச் சிறப்பு பொருள்களான ஒட்டை, குதிரை, கழுதை பேரீச்சமரம் மணல் பரந்த பாலைவனத்தின் இடையிடையேயுள்ள 'ஒயசிஸ்' என்னு நீரூற்றுகள் முதலானவை நாட்டுப் படலத்தில் இடம் பெறவில்லை, இவை அரபு நாட்டுக்கே உரிய சிறப்புப் பொருள்கள் அல்லவா?

மழையையும் மழைக்குக் காரணமான மேகத்தையும் சிறப்புச் செய்து பாடுவது தமிழ்ப் புலவர் மரபு. ஆகி காவியமாகிய சிலப்பதிகாரத்தில், மாமழைப் போற்றுதும் மா மழை போற்றுதும்' என்று இளங்கோ அடிகள் மழையைப் போற்றினார். திருவள்ளுவரும் தம்முடைய திருக்குறளில் வான் சிறப்பு கூறி மழையைச் சிறப்பித்துள்ளார் உமறுப் புலவரும் நாட்டுப்படலத்தை, மேகத்தையும் மழையையும் முன் வைத்துத் தொடங்குகிறார் மேகத்தை நபிகள் நாயகம் அவர்களின் புகழுக்கும் அதன் செயலாகிய மழையை அவருடைய அருட் கொடைக்கும் உவமைப்படுத்திக் கூறுகிறார். இச்செய்யுன் படித்து இன்புறத்தக்கது.

தருங்கொடை நயினார் கீர்த்தி சகமெலாம் பரந்து முஞ்சி

நெருங்கியே விசும்பில் அண்ட முகடுற நிறைந்தவே போல்