பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68


பெருஞ் சூராவளிக்க எதிராகச் சிற்றெறும்பு மூச்சு விடுவது போலவும், இடிமுழக்கத்துக்கு எதிராக விரல்களை நொடித்து ஒசையுண்டாக்குவது போலவும் இருக்கிறது என்று அவை யடக்கம் கூறியுள்ளார்.

புலவர்கள் தங்களை ஆதரித்துப் போற்றிய புரவலர்களுக்குத் தம்முடைய நூல்களில் நன்றி நவில்வது உண்டு. கவிச்சக்கரவர்த்தி கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலைத் தம்முடைய இராமாயணக் காவியத்தில் சில செய்யுட்களில் கூறியுள்ளதைப் பலரும் அறிவார்கள் உமறுப்புலவரும் தம்முடைய சீறாப்புராணத்தில் தம்மை ஆதரித்துப் போற்றிய அபுல் காசீம் மரைக்காயரைப் போற்றியுள்ளார். அந்த செய்யுட்கள் இவை:

'செந்நெவிற் பெருக்கின் கனைகுரற் சகடந்
திசைதொறு மலித்தன செருக்குங்
கன்னலங் கழனி புகுந்தறுத் தடைந்த
களமர்கள் ஒலிகுரற் செருக்குத்
தன்னுபூங் கமுகசிதறுசெம்பழுக்காய்
கமப்பவர் கம்பலைச் செருக்கு
மன்னவன் வகுதைத் துரையபுல் காசீம்
உளமனைச் செருக்குமொத் திருக்கும்'[1]
வடுவிழித் தடமுலை யார்கண் மா மதன்
அடறரும் உசைன் நயினார்தம் ஆருயிர்க்
கடகரி யெனுமபுல் காசீம் செல்வம்போல்
இடனறப் பெருகியங் கிருந்த வாவியே,"[2]

அபுல்காசீம் வள்ளல் தம்முடைய மனத்தில் நபிநாயகம் அவர்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவர் என்று உமறுப் புலவர் கூறுகிறார்.

"வரியளி அலம்பும் புயன் அபுல் காசீம்
மனத்துறை வரிசைதற் நயினார்"[3]


  1. 1. சீறா நாட்டுப் படலம் 41
  2. 2. சீறா புனல் விளையாட்டுப் படலம் 8
  3. 3. சீறா. மணம்புரி படலத் 118