பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


"முருகு ண்டு அறுகாற் சஞ்சரிகள்
முரலும் புயத்தார் உசன் நயினார்
அருமைத் தவத்தால் வந்துதித்த
அபுல் காசீம் தன் செழுங்சரம் போல்
பெருகத் தருஞ்செல் இனக்குலங்கள்
பிறங்கும் பிறங்கள் இடத்திருந்த
வரிசை நபியை நோக்கிப் பின்னும்
வந்தார் வானோர் கோமானே'[1]

கரட முகம்மதக் கரிநிகர் துரையபுல் காசீம்
இரவ வர்க்களித்து அவனிரு நிதிபெரு கின போல்
மரும லர்த் தடவாவியும் கழனியும் வழிதேன்
முருகொ டுங் கனி தரும்பொழில் அனைத்து முன்னினனால்'[2]

உமறுப் புலவர் முஸ்லிம் ஆகையினால் இந்த காவியத்தைப் பக்தியோடும் மத நம்பிக்கையோடும், ஆர்வத்தோடும் எழுதியுள்ளார். இந்தக் காவியத்தில் தமிழ் மணமும், இஸ்லாம் மணழும் கலந்து கமழ்கின்றன. நெடுக இடையிடையே அரபு மொழிச் சொற்கள் கலந்திருப்பது தவிர்க்க முடியாதது முஸ்லிம் அல்லாத தமிழர் இதைப் படித்து பொருள் தெரிந்து கொள்வது கடினம். காவிய நடை எளிய நடைதான். இடையிடையே அரபு மொழிச் சொற்கள் கலந்திருப்பதனால் இது மணிமி.ை பவளம் போன்று இருக்கிறது. ஆகவே அரபுத்தமிழ் அகராதி ஒன்று வேண்டியிருக்கிறது.

உமறுப்புலவர் சீறாப்புராணத்தை வி லா த த் து க் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம். ஹிஜுறத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டமாக வகுத்திருக்கிறார். விலாதத்துக் காண்டம் கடவுள் வாழ்த்தை நீக்கி நாட்டுப் படலம் முதலாகக் ககுபத்துல்லா வரலாற்றுப் படலம் ஈறாக இருபத்து


  1. 1. சீறா. தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 35
  2. 2. சீறா. ஹபீபு மக்கத்துக்கு வந்த படலம் 42