பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76


சட்டவேண்டா. முறை உயிர் ஆனாலும், உயிர் சிறப்பது உள்ளத்தாலுமே. ஆகவேதான் உணர்த்துமுறை-கவிதையின் உயிர் எனவும், உள்ளடக்கம்-கவிதையின் உள்ளம் எனவும் உருவம் கவிதையின் உடல் எனவும் கருதவேண்டும். மூன்றும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கவே கவிதை முழுமை பெறுகிறது. எதேனும் ஒன்று ஊனமானாலும் கவிதை நொண்டி ஆகிவிடும். உயர்த்து முறை-என்ற உயிரில்லாத சொற் கூட்டம் வெறும் சடலமே. உள்ளடக்கம் இல்லாமல் கவிதை எதுவும் பிறப்பதே இல்லை. மூன்றும் சரிசம விகிதமாக அளவாக இருக்கும்போது கவிதை முழுமை பெறுகிறது.

சீறாவின் சீரான உணர்த்து முறையைச் சாற்றுவன நூற்றுக்கணக்கானவை. அவற்றுள் ஒரு மூன்றை மட்டும் இப்போது போற்றிக் காட்டுவேன். 1. அவையடக்கப் பாட்டுக்கள் கவிஞனின் நாவடக்கம் காட்டுபவை. எனினும் கவிஞனின் பாமுழக்கம் நீட்டுபவை. கம்பர் சில பாணியில், அவையடக்கப் பா இசைப்பார். வில்லிபுத்துார் ஆழ்வார், தன் பாங்கில் கவிதை படைப்பார். உமறு மற்றவர் பாதையில் போகாமல் புதுப் பதையில் கவிதை படைக்கிறார்.

மழை கொட்டுகிறது. இடி இடிக்கிறது; மின்னல் வெட்டுகிறது இவற்றுடன் கொடும்புயலும் வாட்டுகிறது. கடல் அலைகள் கரம் உயர்த்திக் கரையை மோதுகின்றன; கடலுக்கும் கரைக்கும் போரோ? விண்ணுக்கும் மண்ணுக் கும் பகையோ? நிலை குலையா மலையே குலையுமாறு மழை பொழிகிறது; புயல் சீறுகிறது. அந்தப் புயல் சீற்றத்திற்கு முன்னே - ஒரு புல் எறும்பு - சிற்றெறும்பு மூச்சு விட்டால் எப்படி இருக்கும்? அப்படித்தான், நற்றமிழ்ப் புலவர்களின் முன் தான் காவியம் படைப்பது - என்று எழுதுகிறார் உமறு அந்தப் பேரிடிக்கு முன்னே, இவர்தம் கவிதை, கையால் நொடிக்கும் சின்ன ஒலியாம்.

"படித்த லத்தெழு கடல்குல கிரிநிலை பதற
வெடுத்து வீசிய சண்டமா ருதத்தினுக் கெதிரே