பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


மிடித்து நொந்தசிற் றெறும்பொரு மூச்சுவிட்டது போல்
வடித்த செந்தமிழ்ப் புலவர்மு னியான்சொலுமாறே
"அடிய டித்தொறும் வழுவலால் விதிலினத்தறியேன்
படிப டித்தசெஞ் சொற்புல வோர்முனம் பகர்த
இடியி டித்திடு மாரவா ரத்தினுக் கெதிரோர்
நொடி நொடிப்பது போலுமொத் திருத்ததேன்னூலே,"[1]

உமறுப்புலவர் தம் அடக்கம் அல்ல இங்கே பொருள்.அவர் தம் கவிதை ஆட்சி கவிதை மாட்சியே இங்கே பொருள்.

நானில மக்களை எல்லாம் ஈர்த்து சேர்க்கும் நகரம் மக்கா. அந்நகரம் மனவளம் மிக்கது; அன்றியும் மனித வளம் மிச்கது. அங்கு விண்ணை முட்டும் மாளிகைகள் உள்ளே வெண்ணிலாக்கள்; பெண்ணிலாக்கள்! அவர்கள் பேசும் பேச்சில், பாட்டுப் பண் இசைக்கிறது: குழந்தையின் கொஞ்சலும், கெஞ்சலும் மக்கா நகர மகளிரின் உரையாட்டில் குழைகிறது. அவர்கள் தத்தம் மாளிகையில் தம் கூந்தலுக்கு சாம்பிராணிப்புகை ஊட்டிக் கொள்கிறார்கள்! கவிஞர் உமறு சொல்ல வந்த பொருள் இதுதான் ஆனால் சொன்ன முறை கற்கண்டாய் இனிக்கிறது; கனிச்சாறாய்ச் சுவைக்கிறது.

மகளிர், கூந்தலுக்கு ஊட்டிக் கொண்ட புகை திரண்டு விண்ணை முட்டுகிறது அது மண்ணுக்கும் விண்ணுக்கும் போட்ட ஏணியாகப் புகை ஏணியாக இலங்குகிறது: தாம் விளங்குகிறதாம். பாட்டைக் கேளுங்கள்:

வெண்ணில வெறிக்கு மிரசதத் தகடுவேய்ந்தமே ணிலைவயின் செறிந்து
பண்ணிருத் தொழுகு ரென்மொழிக் குதலைப்
பாவையார் செழுங்குழல் விரித்து


  1. 1. கடவுள் வாழ்த்து 18, 20