பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உமறு தரும் சீறாவில் தமிழ்ப் பண்பாடுகள்

சிலம்பொலி சு. செல்லப்பன்

பொதுச் சொத்து

கவிஞர்கள் உலகின் பொதுச் சொத்து; அவர்தம் படைப்புகளும் அங்ங்னமே! எந்தக் கவிஞனையும் எவரும் "இவன் எம் நாட்டிற்கு மட்டுமே சொந்தம்" என உரிமை கொண்டாட முடியாது. அங்ஙணம் கொண்டாலும் அக் கவிஞன் அவர்களுடைய கட்டிலிருந்து அவர்கள் அறியாமலேயே விடுபட்டு உலகத்திற்கே உரிமையுடையவனாகிவிடுகின்றான். காரணம் அவனுடைய படைப்புகள் தனிப்பட்ட ஒருவனுடைய அல்லது ஒரு சாராருடைய உணர்ச்சிகளை, நன்மை தீமைகளை, சாதாரண நிகழ்ச்சிகளை மட்டும் பிரதிபலிப்பனவாய் இல்லாமற் அவற்றில் உலக மகிழ்ச்சி, உலக நன்மை, உலக ஒருமைப்பாடு முதலியன இழையோடிக் கிடப்பதோடு, அல்லலும் மனித உள்ளங்களை அவை எங்கிருந்தாலும் ஆற்றுவித்து மகிழ்ச்சியையும் தெம்பையும நல்குவதாலேயாம். அதனாற்றான் வான் புகழ் வள்ளுவரும், சிலம்பு தந்த இளங்கோவும், கவியரசர் கம்பரும், வால்மீகியும், தாகூரும், ஷேக்ஸ்பியரும் உலகிற்கே உரியவராகின்றனர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை உள்ளக் கிடக்கையாகக் கொண்டவர்கள் உலகுக்குக் கேளி ராகத் தானே இருக்கமுடியும்!

கவிஞரின் உரிமைகள்

உலகம் போற்றும் உயர் கவிஞர்கள் தம் படைப்புக்கென எதையும் எடுத்தாள்வர். உயரிய வாழ்க்கைத் தத்துவங்களும், இறையுணர்வும், இயற்கை வளங்களும் அவர்களின் கவிதைப் பொருளாயிருக்கலாம்; அன்றிக் கயிறு