பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


புனையொன் கைக்கோன் நாரும், காட்டில் ஒடும் நரியின் ஓட்டமும் சுடப் பாடு பொருளாகலாம். அவர்கள் பாடுவது தம் நாட்டுக் கதையாயமிருக்கலாம்: அன்றிப் பிறநாட்டு-பிழ மொழிக் கதையாயுமிருக்கலாம் எந்நிகழ்ச்சி கொண்டு எந்நாட்டைப் பற்றிப் பாடினாலும் அவர்களுடைய படைப்புச்சளைக் கூர்ந்து நோக்கும்போது அவற்றில் மூல நிகழ்ச்சிகளின் கருவும் நோக்கமும் ஒருங்கு இருந்தாலும் படைக்கும் கவிஞனின் நாடு மொழி, சமுதாயப் பண்பாட்டுச் சிறப்புக் கூறுகள் இழையோடாமலிராது என்பதை உணர முடியும் அவ்வாறு பாடுவதில்ல் தவறுமில்லை; தவறு காணவும் கூடாது, தமிழ் நாட்டுச் சந்தனம் வேற்று நாட்டாரின் மார்பில் பூசப்பட்டாலும் தன் மணத்தைத் தருவதன்றி வேற்று நாட்டான் என்பதற்காக மாற்று மணம் தரு வதில்லையே!

உமறுபபுலவர் உள்ளம்

மேலே கூறியவற்றைக் கருத்தில் கொண்டு அரபு நாட்டு நிகழ்ச்சியாகிய நபிகள் நாயகத்தின் வரலாற்றினைத் தமிழகத்தில் வாழ்ந்த உமறுப்புலவர் சீறாப்புராணமாகப் பாடியதில் எந்த அளவு தமிழ் நாட்டுச் சூழலும் பண்பாடும் இழையோடியிருக்கின்றன என்பதை ஈண்டுச் சிறிது காண் போம் உண்மை வரலாறு என்பதால் நாயகத்தின் வரலாற்றில் ஆசிரியர் எவ்வித மாற்றமும் செய்யவில்லை; செய்யவும் கூடாது. ஆயினும் அவ்வுண்மை வரலாற்றைப் படைக்கும்.

அவையடக்கப் பண்பு

கல்வி கேள்விகளிலும் செல்வத்திலும் நம் முன்னோர் உயர்ந்தேயிருந்தபோதிலும் அவர்கள் அடக்கத்தை அணிகலனாகக் கொண்டு ஆன்றவிடந்தடங்கிய சான்றோராய் விளங்கியிருந்தமையையே நாம் காணமுடிகிறது. அதனால்தான் போலும் வரலாறு காணமுடியாப் புகழ் வாய்ந்த போது அவ்வரலாற்றுப் பின்னணிகளில் - கருப்பொருள்களால் - நிகழ்ச்சி அமைப்புகளில் - செயல் விளக்கங்களில் தமிழ்ப் பண்பாடுகளையும் இணைத்துச் சொல்வதில் அவர் தவறவில்லை.