பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


காதற் சூழ்நிலை

தமிழிலக்கியங்களில் காதற் காட்சிகள் மலையும் மலை சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளிலும், இன்பந்தரும் சோலைகள், ஆறு குளங்கள் நிறைந்து முல்லை - மருத நிலப் பகுதிகளிலும் கடற்காற்று வீசும் நெய்தல் நில இனிமையிலும் முகிழ்த்துச் சிறப்பதை அறிவோம். நபிகள் நாயகத்தின் மேல் நாட்டம் செலுத்தும் கதீஜாப்பிராட்டியார்க்கு அரபுப்பாலைவனத்தில் இவ்வினிய சூழ்நிலைகள் கிடைக்க வழியில்லை என்றாலும் உமறுவின் பாடலால் அவை அவருக்குக் கிட்டி விடுகின்றன. ஊசா அவர்களின் விருந்தேற்றுக் கொண்ட நபிகள்,' நீர்ப் பூக்கள் முகையவிழ்ந்து நகை விரிக்கும் வாவிகளையும், அரியேறு பாயக் கண்ட மதகரி தன் பிடியுடன் அஞ்சியொதுங்கும் மலைகளையும், மானினத்தை வீழ்த்தி உண்ணும் வேடுவர் உறைந்த சிற்றுார்களையும் மத்தொலி மாறாத ஆய்ச்சியர் வாழ்விடங்களையும் கடந்து ஒரு சோலையில் தங்கினார். அப்போது தேவதூதர்கள் விண்ணிலிருந்து இறங்கி நபி களுக்குக் குங்கும மலர் மாலைகள் சூட்டி, ஒப்பற்ற இருக்கையில் ஒட்டகத்தின் மீது அமர்த்தி, பல்வகை வாத்திய ஒலிகளுடன் தேவமகளிரும் புடைசூழ உலாவரச் செய்கிறார்கள். அவ்வூர்வலம் கதிஜாப்பிராட்டியின் வீதியிலும், வர அதனைக் கண்ட பிராட்டியார் தம் விழியும் மனமும் மெய்யும் மகிழ்வுறும்படியாக நபி நாதரின் அடிகளில் வீழ்ந்து இறைஞ்சி ஒன்றுகிறாாகள்.

யர் வாழ்விடங்

பரித்திரள் தொடர வானவர் ஈண்டிப்
பரிமளப் பொன் அலர் துாற்றத்
தெருத்தலை புகுந்து பவனியின் உலவிச்
செழும் புகழ் முகம்மது வரவுங்
கருத்துடன் கண்ணும் களிப்புற நோக்கிக்
கவின்மலர்ப் பதம்பணிந் திறைஞ்சத்
திருத்திழை மணியிற் குருத்தேனும் கதீஜா
தெரிதரக் கனவுகண் டெழுந்தார்." [1]


  1. 1. கதிஜா கனவு காண் படலம் 1...15