பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


உவமைகளும் கற்பனைகளும்

அரபிய நிகழ்ச்சிகளை விளக்கி நிற்கும் உவமைகளிலும் கற்பனைகளிலுங்கூட உமறுப்புலவர் தமிழ் நாட்டுக் கருப் பொருள்களைக் கையாள்வதைக் காண்கிறோம். வீரரான 'ஹலரத் அலி இப்னு அபுத்தாலிப்' இஸ்லாத்தில் சேர்ந்தார் என்பதை விளக்க வந்த கவிஞர் அவரைச் ‘சுதந்திரப் புலி என்னும் தோன்றல்.’’[1] என்றும் ஹலரத் உமறுகத் தாப் (ரலி) 'கலிமா' உரைத்து 'ஈமான்' கொள்ளவே இங்கு வந்தேன் என்று நபிகளிடம் கூறியபோது அதைக் கேட்ட நபிகளின் மகிழ்ச்சியை, செவ்வி கமல முகம் மலர்ந்தது?[2] என்றும் ஆசிரியர் உவமை வாயிலாக விளக்கு கிறார்.

இவை போன்ற உமறுவின் கற்பனைகளும் தமிழ் நிலத்துக் கற்பனைகளாகவே காட்சி தருவதைத் 'தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலத்தில்' காண முடிகிறது. வள்ளல் நபியிடம் ஹபீபு அரசர் தசைக் கட்டி உருவினளான தம் மகளைப் பெண்ணுருவாக ஆக்கித் தருமாறு வேண்டிக் கொண்டார். அதன்படி நபிகள் ஆக்கியருளிய அழகிய இளம்பெண்ணைக் கவிஞர் வருணிக்கும் கற்பனைதான் என்னே? அவளுடைய கூந்தல் மேகத்திலும் விரிந்து நஞ்சினும் கறுத்து, கறுமணலைப்போல் அடுக்கடுக்காகப் காட்சியளித்தது; பல்வண்ணமும் பற்களும் முல்லை மலரையும் இறகடிக் குருத்தையும் வரிசையாக வைத்து, முத்துக்களைப் போல் ஒளிவிடும் அவ்வரிசைகளை மாணிக்க மணிகளில் பிரித்து முறையாக அடுக்கி வைத்திருந்தது போன்றிருந்தது; மொழியோ பாலென, கனியென, பசுமடல் தேனென, கிளியென, அமுதென இருந்ததாம். முகமோ மதியமாம், தோளோ மூங்கிலையும் கரும்பையும் மெல்லிய பஞ்சனையையும் வென்று விடுமாம்! இவ்வாறு அவள் தோற்றம்.


  1. 1. சீறா. தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 16
  2. 2. சீறா, உமறுகத்தாபு ஈமான் கொண்ட படலம் 91