பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91


மேலாய் யாவரும் அடுத்தோம்" [1] என்றான். அஹமது என்பவர் மட்டும் வெளியில் இருக்கிறார். அவரை விட்டு வந்துவிட்டேன் என்று அவன் கூறியதும் பார்க்கவேண்டுமே 'இசிறா'வின் துயரத்தையும், சினத்தையும்! கவிஞர் கூறுகிறார்:

"தீயினும் கொடிய மாற்றம்
செவிமடல் துளையில் ஒடிப்
போயது சிந்தை யூடு
புகைந்திடப் புழுங்கிப் பொங்கி
வாயில் நீர் வறந்து கண்ணில்
வளர்தழல் கொழுந்து காட்டி
காய்ச்சின ஏறு போன்றான்
கவலு நூற் புலமை யோனே"[2]

"ஒருவனைத் தவிர மற்றவர் வந்தோம் என்ற போதெழுந்த சீற்றம் இது.

"விருந்து பறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும வேண்டற்பாற் றன்று"[3]

என்று திருக்குறள் செப்பும் பண்பாடு கவிஞர் உமறுவின் 'இசுறா' வாய்ச்சொல்லாக சீறாவில் வெளிவருவதைக் காண்கிறோம்,

தமிழ்நாட்டின்-தமிழ்ப் புலவர்களின் இலக்கிய வழக்கிலும் உலக வழக்கிலும் பயின்று வரும் பல பழக்க வழக் கங்களும்கூட சீறாப்புராணத்தில் இடம் பெற்று நிற்பதைப் பல இடங்களில் பார்க்கலாம். மிகப் பெருஞ்சிறப்புக்கோ வலிமைக்கோ உவமை சொல்லும்போது தமிழுலகில் ‘மேருவை'க் குறிப்பிடுதல் உண்டு. இம்மேருவை உமறுப் புலவர் அரபு நாட்டிற்கும் கொண்டு செல்லுகிறார். போரிடுவதற்காக நபி அவர்கள் பேரீச்சம் பாளையை எடுத்து ஆயுத


  1. 1. சீறா இசுறாகாண் படலல் 28
  2. 1. சீறா இசுறாகாண் படலல் 29
  3. 3.குறள் 82