பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

 குறிப்பாக தமிழ்ப்பட நாரதர்களைச் சுட்டிக் காட்ட முடியும் பாட்டிலே இனிமை இருந்து விட்டால் மட்டும் போதுமா? திரையில் திரிகின்ற நாரதர்கள் அகண்ட கண்களைச் சுழட்டிக் கோணத் தில் தேக்கி, குவிந்த இதழ்களிலே குமிண் சிரிப்புத் தீட்டி தலையைச் சாய்த்து நின்று வெட்டி வெட்டிப் பேசும்போது குறும்புத்தனமும் குதர்க்க நினைவும் கலகத் தொழிலும் கொண்ட வஞ்சக நாரத ராகத் தோன்றவில்லை: யாரையோ மயக்கக் கங்கணம் கட்டி வேலை செய்கிற வஞ்சியராகவே திரிகின்றனர். திரை மறைவு நிகழ்ச்சிகளின் நினைவு திரைக்காட்சிகளின் போதும் பிரதிபலித்து விடுகின்றனவோ என்னவோ! இவ்வளவுக்கும் மேலாக - சோளக் காட்டுப் பொம்மைக்கும். புது வீட்டு இளிச்ச வாய்க் கோரணி களுக்கும் பொருத்தமில்லாமல் ஏ தே தோ உடை மாட்டிவிட்டு, கரும் புள்ளி செம்புள்ளி குத்தி பூர ணத்தவும் அளிக்கிற கணக்கிலே - அமையும் தொள தொளத்த ஜிப்பா அல்லது நீண்ட போர்வை ஒரு படத்திலே பாவாடைராயன் பண்பாட்டிலே அங்கி அணிந்து திரியும் குள்ள நாரதர் இன்னொரு படத் திலே போர்வை போர்த்தி நெட்டையாகிய ஒட்டக மாகிவிடுவார் திரிலோக சஞ்சாரியான அவர் இஷ் டம் போல் பிரிந்து திரிந்து பெருக்கும் உருவினர் போலும் - ஆண்மை பெற்றும் வருவார். அப்போது தாடி வாலாவாகக் காட்சி தருவார் ஒரு படத்தில். மழுங் கச் சிரைத்த மாண்பு டாலடிக்கும் ஒரு நாரதர் முகத்திலே!

மேகங்கள் அசையாது நிற்கும், கிர்ரென வழுக்கி வழுக்கிக் கீழே விழுந்து, ஒரு ஆட்டம் ஆடிச்சமா