பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

 என்ன அபத்தம் இது? காட்டுமிராண்டித்தன மான கற்பனை! கடவுளின் - அப்படி ஒருவன் இருந் தால்-பண்புக்கே உலை வைக்கிற வேலை இது மேலும் சிவனாரின் மூ ஞ் சி யி லே கரிபூசும் வியாபாரமும் ஆகும் - பிறவா யாக்கைப் பெரியன்’ என பக்தர்கள் போற்றும் பேறு பெற்ற பரமசிவன் கா | ம னை க் காய்ந்தவன், காமனை எரித்து காமத்தை ஒடுக்கிய பித்தன் என ஏடுகள் கூறுகின்றன. ஆனால் கண்மூன் ஆடும் நிழற்படம் காட்டுகிற கோலமோ அவன் அப லையை அர்த்தராத்திரியில் இழுத்தவன் என்று பக்த னின் மனைவியைப் படுக்க அழைத்து ப க் தி யை ச் சோதிக்கும் பண்பு பெற்றவன் பரமசிவன் என்று புராணப் புளுகுகள் எழுதி வைத்தவர் அடிச்சுவட் டைப் பின்பற்றி கன்னியைக் கைபற்றி இழுக்கும்படி சிவனை ஆட்டி வைத்தனர் போலும் இன்றையப் படவுலகப் பிரம்மாக்கள்! எவ்விதமாயினும் ஆகுக'. அது மனிதப் பண் புக்குக் கூட ஏற்றது அல்ல. பின் அதைக் கடவுள் செயல் என்று எப்படி ஒப்புக்கொள்வது? இந்தக் கொள்ளையிலே, இது ஒரு சரித்திரப் படம் என விளம்பரங்கள் கூவுகின்றன.மொகலாய ராஜன் காலத்துக் கவிஞரின் வாழ்க்கைச் சரித்திரம் என்று துணிந்து கூறுகிறார்கள். நாட்டில் உள்ளோ ரனை வரும் இளிச்சவாயர்கள் என எண்ணிவிட்டார் கள் இந்த பிரகஸ்பதிகள். இது கிடக்க இன்னும் பலவித சித்துவிளை யாடல்கள் புரிய வல்லவர் சிவனார் என்பதை சினிமாக்க ள் கூறும். புராணப்புளுகுகளும் பக்தர்கள் பாடி