பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

வைத்த ஏடுகளும் ஏற்றிச் சொல்லாக அற்புத லீலைகள் செய்து காட்டுகிறார் சிவனார். ஒரு படத்தில் உருளைக் கிழங்கு போண்டா' மாதிரி உருண்டு திரண்டு பளபளப்பார் பரமசிவன். மற்றோர் படத்திலோ அரிசி அப்பளம் போல் வந்து அருள் புரிவார், ஆணழகனாக மிளிரும் அதே பரமசிவம் இன்னுமொரு தியேட்டரில் ஒடும் படத் தில் பேடி யாக ஆடுவார் ஒரு முறை மீசை இருக்கும். வேறொரு முதலாளி சிருஷ்டித்துவிட்ட சிவனுக்கு மீசையே இராது, இன்னுமோர் கும்பவின் தயவால்.

சிவனார் செம்மறியாட்டுக் கொம்புபோல் முறுக்கு மீசையுடன் வருவார். திருப்பூர் பருப்பு மூட்டை” யாக ஒருமுறை திகழும் சிலன் மறுபடத்தில் பஞ்சத் தில்,அடிபட்ட பரதேசியாக மாறுவது ஏன் என்பது நான் அறியாத புதிர். சிவனாரின் தாடி படத்துக்குப் படம் ரசிக்க வேண்டிய அம்சம், சில சமயம் தாடியில்லாமலே வந்து வத்து போவது தனிச்சிறப்பு எல்லாம் வல்ல சிவனார் சிலவேளைகளில் பாம்புக் கும் துணி வடத்துக்கும் உள்ள பேதம் உணர முடியாத அளவுக்கு பைத்தியக்காரராகி கழுத்து கைகள் எங்கும் துணிப்புரிகளையும், கண்ணாடி முத்து வடங்களையும் கட்டிக்கொண்டு பேயாட்டம் போடுவ தும் உண்டு தமிழ் படங்களில். பனிமலை யென பாவிக்கப்பட வேண்டிய ஏதோ மாதிரியான செய்குன்று மீது கஞ்சா அடித்த நோஞ் சான்.போல, விறைப்பாக உட்கார்ந்திருக்கும் சிவனை யும், சக்தியுடன் கூத்தாடுகிற புலித் தோல் உடுத்த பரமனையும் படங்களில் காணமுடியும்,