பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

3 í தங்களுக்குப் பணமும், சுகம் அனுப வி க்க மங்கையரும் கிடைத்தால் போதும் என்று திருப்தி கொண்டு விடுகிற பணமூட்டைகளின் கையிலே சிக் கிக் குற்றுயிரும் குலைஉயிருமாக வாழ்கிறது. தமிழ்ப் படக்கலை, புகழ் வெறியும் பெண்ணாசையும் பிடித்த நடிகர்கள் கலையுலகக் காளான்களாகப் பெருத்து விட்டனர். கட்டிப் பிடிப்பதும், தூக்கிப் படுக்கவைத்துப் பக்கலில் சாய்ந்திருப்பதும். துவைத கீ த ம் பாடி மகிழ்வதுமே நடிக வாழ்வின் லட்சியம் என எண்ணி நடிக்கிறார்கள். திரை மறைவில் காமக் களியாட்டும், குடிவெறிக் கூத்தும் பயின்று உடலையும் உள்ளத்தை யும் பாழடித்துக் கொள்கிறார்கள், அதன் மூலம் கலை குட்டிச்சுவராக, குப்பை மேடாக, சாக் கடைத் தேக்கமாக மாற்றிவிட்டார்கள். இத்தகைய முதலாளிகள், நடிகர்கள், நடிகை கள் ஆதரவிலேதான் தமிழ்ப்படக் கலை வாழவேண் டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இன்றைய நடிகர் கள் என ஆனானாப்படுத்தப் படுகிறவர்களில் முக் காலே அரை வீசம் பேர் அந்தப் பெயருக்கே அரு கதையற்றவர்கள். அவர்களுக்கும் நடிப் புக்கும் ரொம்ப தூரம். - சென்ற பதினைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சினிமாக்கலை தலையாட்டி வருகிறது. சுமார் ஐநூறு படங்கள் பிறந்து விட்டன. எ ன் றா லும் தமிழ் நாட்டுக்கு தமிழ் கலைக்கு, தமிழுக்கும் தமிழருக்கும். பெருமை தரவல்ல உயர்ந்த படம் ஒன்று கூட உரு வானதில்லை என்பது தமிழ்ப் படக்கலைச் சரித்திரத் . திலேயே அழிக்க முடியாத க ரு ம் பு ள் ளி. அத்