பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

5. உருப்படுமா?

தமிழ்ப்படம் உருப்படுமா? என்ற கேள்வி நிச்சயமாகச் சொல்லலாம். இதே ரீதியில் போனால் தமிழ்படம் உருப்படவே உருப்படாது என்று. பொதுவாக கடவுளர்களும் அவர்களது பக்த பரம்பரையும், இக்கும்பலின் வீலா விநோத சித்து விளையாடல்களும் சினிமா உலகில் குடிபுகுந் திருக்கும் வரையில் தமிழ் சினிமா உருப்படும் என்று கனவு கூட காண வேண்டியது இல்லை, திறமை கௌர விக்கப்படும் நேர்மை வரும் வரையில் எந்தக் கலையும் முன்னேறி உருப்படியாக உயிர் வாழ்வது சாத்தியயில்லை. தளுக்கும் மினுக்கும், அபிமானமும் அந்தப்புர அந்தரங்க உறவுகளுமே சிபார்சுச் சிட்டுகளாகவும், முன்னேற்றத் துறுப்புகளாகவும் போற்றப்படும் வரை அறியாமையும் அந்தகாரமும் தலைவிரித்துத் தான் தாண்டவமாடும். சந்தர்ப்ப வசத்தால் புகழ் பெற்றுவிட்ட ஒரு சில நடிகர்களுக்கு ஆயிரமாயிரமாகப் பணம்கொட்டி கும்பிட்டுக் கூத்தாடி அவர்களைக் கெஞ்சி வாழ்கிற முதலாளிகள் இருக்கும்வரை, புதிய ஆட்களைத் தேடிப்பிடித்து தக்க சந்தர்ப்பமளித்து ஊக்குவிக்கத் துணியாத பணமூட்டைகள் உள்ளவரை, தமிழ் சினிமாக்கலை உருப்படவே உருப்படாது.