பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

 வாழவேண்டியிருக்கிறது. இவர் க ள் இவர்கள் கடவுள்களைக் காப்பாற்றுவார்களா அல்லது கடவுள் இவர்களைக் காப்பாற்றுவார்களோ என்பதே அறிய இயலா விஷயங்கள். - தமிழ் சினிமாத் துறையை வியாபாரமாக மதிப்பதை நான் குறைகூறவில்லை, பணம் போடுகிற முதலாலிகள் சுயநலத்துக்காக கலையை உருப்படா மல் அடிக்கிற, வேளையிலேயே, தங்கள் செயலுக்கு நாட்டு மக்கள் தான் காரணம் என்று ஏமாந்தவர் தலையிலே பழிசுமத்த முயலும் பண்பைத் தான் கண்டிக்கிறேன். . திசை மகாஜனங்களையோ, அம்மாமிகளையோ கலையை அளக்கும் தர்மா மீட்டர்களாகவும் தராசு களாகவும் படிகளாகவும் ஏன் கொள்ளவேண் டும் அவர்கள் கூட முன்பு இருந்ததுபோல் இல்லை. விழிப்புற்று தான் வருகின்றனர், அப்படியே இருந்தாலும் கூட, மக்களிடையே விழிப்பு ஏற்படுத்தி, நல்வாழ்வுக்கு வழிகாட்டி, சமூக அந்தஸ்தை உயர்த்த ஆவண செய்வது அல்லவா கவி ஞர்களின் கடமை அதை மறந்துவிட்டு மழுப்புவது பேதமை. நேர்மையான செயல் அல்ல. தமிழ்ப் படக்கலை உருப்பட வேண்டுமானால், மேலும் மேலும் கடவுளர்களை ஆடவிடக் கூடாது. புரா ணப் படங்களையே இன்னும் பிடித்துக் குவிக்கக் கூடாது. கடவுளர்களை அவர்கள் யதா ஸ்தானங்களி லேயே யோக நித்திரை பயில விட்டுவிட்டு, வாழ்க்கை யைப் பிரதிபலிக்கும் இலக்கிய முயற்சிகளையும், சமூக சித்திரங்களையும், உயர்ந்த எண்ணங்களை எழுப்பும் நல்ல படங்களையும் பிடியுங்கள்.