பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எரிமலைப் பதிப்பக வெளியீடு 4.
(முதல் பதிப்பு ஜனவரி 1947)
இரண்டாம் பதிப்பு ஜூன் 1947
விலை அணா நான்கு

சில வார்த்தைகள்


தோழர் கோரநாதன் எழுதிய இந்நூல் 'எரிமலை'யின் முதல் வெளியீடாக 'படவுலகில் கடவுள்கள்' என்று பிரசுரமாயிற்று. தமிழ் நாடு அதற்கு அளித்த வரவேற்பு எங்கள் முயற்சிக்குத் தந்த பாராட்டு, உற்சாகமுடன் முன்னேற அளித்த கரகோஷம்! ஒரு மாதத்திற்கு பிறகு ஆவலுடன் புத்தகம் கேட்ட அன்பர்களுக்கு 'கைவசமில்லை' என்று ஏமாற்றம் அளிக்க நேர்ந்தது. வசதிகள் இருந்திருப்பின் இரண்டாம் பதிப்பை முன்னரே கொண்டு வந்திருப்போம். சந்தர்ப்பங்கள் இப்போது தான் உதவுகின்றன. எங்கள் பணியை வாழ்த்துகின்ற தமிழகத்துக்கு எங்கள் நன்றி.


எரிமலைப் பதிப்பகம்.

ஊழியன் பிரஸ், துறையூர்.
Q. H. No. Ty, 40. C. 2000