பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#. ஸ்ரீமதி மகாவிஷ்ணு

"மகா விஷ்ணுவைப் பார்க்க வருகிறீர்களா? : என்று நண்பர் ஒருவர் கேட்டதும் நான் திடுக்கிட் டேன். சித்து விளையாடல்கள் புரியும் பண்பு பெற்ற கடவுளர்களில் ஒருவரான மகாவிஷ்ணு பூலோகத் துக்கு விஜயம் செய்திருக்கிறா ரா என்ற திகைப்பு தான்! கண்ணன் காட்டிய பாதை'யில் அது ஒரு சுவடு என்றுதானே விஷயம் அறிந்தவர்கள் சொல் கிறார்கள் , அப்படி அவசிய அவசரம் ஏற்படும்போது நான் அவதாரம் செய்வேன் என்று கூறிய ஸ்ரீமான் மகா விஷ்ணுவா வந்திருக்கிறார்? எனது அறியாமையை ஓட்டியடித்தார் நண்பர்: நீர் எங்கு நிற்கிறீர் என் பதை மறந்துவிட்டீர் போலும் இது சினிமா உலகம் , ஸ்டுடியோ பூமி. ஐயா, நீர் விரும்பினால் ஸ்ரீமதி மகா விஷ்ணுவை தரிசிக்கலாம்’ என்றார், 'ஸ்ரீமதி விஷ்ணுவா: அதாவது லக்ஷ்மியா அல் லது......" அட பாபமே! உமக்கு ஒரு எழவுமே தெரியாது போலும் எந்த உலக விந்தை அறிந்தாலும் இந்தச் சினிமா உலக லீலைகளே உணரவில்லை நீர். இங்கு வாரும் என அழைத்துச் சென்றார், படப் பிடிப்புக்கு வேண்டிய ஆயத்தங்கள் நடை பெற்றுக்கொண்டிருந்தன. வெள்ளித் திரையிலே துள்ளும் நீரலைகளாகக் கண் சிமிட்ட வேண்டிய