பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7

7. உட்கார்ந்து முழித்து முழித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஒட்டிய கன்னங்களும். கோரமாகக் கீறிவிடப்பட்ட ரத்த வடுக்கள் போல செஞ்சாயத் தால் விகாரமாய் தோன்றிய உதடுகளும், மையுண்ட கண்களும் கில்ட் காகிதம் ஒட்டிய அட்டை முடியும், சில கண்ணாடி முத்துச் சரங்கள் ஓடிய ஒட்டிய மார்புமாக பகல் வேஷக்காரன் மாதிரி காட்சி தக்த அந்த அம்மாளுக்கும் மகாவிஷ்ணு என்கிற களப கஸ்தூரி பீதாம்பரதாரியான சங்கு சக்ரபாணிக்கும் ஏணி வைத்தாலும் எட்டமுடியாது: ஆடம்பர அலங்காரப் பிரியரான லக்ஷ்மிகாந் தன் ஒரு கற்பனை உருவம்தான். அதி அழகான கற் பனை என்றால், கலைஞர்களின் கற்பனை மேக்கப் செய்து பிரத்தியட்சமாக்கி திரையிலே ஆட விடுவ தற்காகத் தயார் செய்திருக்க அம்மா மகாவிஷ்ணு மூளி அலங்காரி மூத்தண்ணன் பெண்டாட்டி’ என்ற கதையில் தான் திகழ்ந்தாள். இந்த அவலட்சண மகா விஷ்ணுவுக்காக சில, ஆயிரம் அடி கச்சா பிலிம்களை கரியாக்க வேண்டும் என்று விவாதித்துக் கொண்டிருந்தார் விஷ்ணுவை ஆட்டிவைக்க வந்த டைரக்டர்-அம்மாளின் அன்பர். 'சில ஆயிரம் அடிகள் அனாவசியம். ஆறு நூறு அடிகள் போதும் என்று எதிர் வெட்டுப் போட்டார் வசனகர்த்தா. அந்த காசுக் கும்பலுக்குக் கசையடி நூறு நூறு கொடுத்துக் கலையுலகை விட்டு கல்த்தா கொடுக்க வேண்டும் என்று தான் என் உள்ளம் துடித்தது!