பக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


சின்னஞ்சிறு பாடல்கள்.pdfஞாயிற்றுக்கிழமை
பிறந்த பிள்ளை


ஞாயிற்றுக் கிழமை பிறந்த பிள்ளை
நன்றாய்ப் பாடம் படித்திடுமாம்.

திங்கட் கிழமை பிறந்த பிள்ளை
தினமும் உண்மை பேசிடுமாம்.

செவ்வாய்க் கிழமை பிறந்த பிள்ளை
செய்வதை ஒழுங்காய்ச் செய்திடுமாம்.

புதன் கிழமை பிறந்த பிள்ளை
பெற்றோர் சொற்படி நடந்திடுமாம்.

வியாழக் கிழமை பிறந்த பிள்ளை
மிகவும் பொறுமை காட்டிடுமாம்.

வெள்ளிக் கிழமை பிறந்த பிள்ளை
வேண்டும் உதவிகள் செய்திடுமாம்.

சனிக் கிழமை பிறந்த பிள்ளை
சாந்த மாக இருந்திடுமாம்.


இந்தக் கிழமைகள் ஏழுக்குள்
எந்தக் கிழமையில் நீ பிறந்தாய் ?

31