பக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


 
தென்னைமரத்தில் ஏறலாம்.
தேங்காயைப் பறிக்கலாம்.

மாமரத்தில் ஏறலாம்.
மாங்காயைப் பறிக்கலாம்.

புளியமரத்தில் ஏறலாம்,
புளியங்காயைப் பறிக்கலாம்.

நெல்லிமரத்தில் ஏறலாம்.
நெல்லிக் காயைப் பறிக்கலாம்.

வாழைமரத்தில் ஏறினால்,
வழுக்கி வழுக்கி விழுகலாம் !

3